இந்நிலையில் கடல் சீற்றத்துக்கு முன் கடந்த 14–ந் தேதி முத்துப்பேட்டையை சேர்ந்த புரோஸ்கான்(25). அசரப் அலி(35) ஆகியோர் மீன்பிடிக்க ஒரு படகில் கடலுக்கு சென்றனர். இருவரும் 3 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இருவரும் கடல் பகுதியில் முகாமிட்டு இருக்கலாம் என்று பெற்றோர் நினைத்தனர்.
இந்நிலையில் புரோஸ்கான் இலங்கையிலிருந்து அங்கு உள்ள ஒரு மீனவரின் செல்போனிலிருந்து தந்தை சேக்முகம்மதுக்கு நேற்று மாலை போன் செய்துள்ளார். தாங்கள் இலங்கையில் இருப்பதாகவும், மீன்பிடித்துவிட்டு படகில் தூங்கிய போது இரவு நேரத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக வழி தவறி இலங்கையில் கரை ஒதுங்கியதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து முத்துப்பேட்டை கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் சிக்கியுள்ள முத்துப்பேட்டை மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை மீனவ சங்க பிரதிநிதிகள் - மக்கள் பிரதிநிதிகள் - சமூக ஆர்வலர்கள் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.