.

Pages

Tuesday, November 24, 2015

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு !

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் செல்லக்கூடிய வடிகால் வாரிகளை உடனடியாக தூர்வார வேண்டும்.  கட்டண கழிப்பறைகளை சுத்தம் வைக்க வேண்டும். அதன் கட்டணங்களை பொது மக்களுக்கு தெளிவாக தெரிகின்ற வகையில் எழுதி வைக்க வேண்டும்.  பேருந்து நிலைய வளாகத்தில் சுற்றி திரியும் கால்நடைகளை உடனடியாக பறிமுதல் செய்து ஏலமிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய பேருந்து நிலைய வளாக முழுவதும் தினமும் சுத்தம் செய்து குப்பைகள் அகற்றி தூய்மை பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு கடைகளிலும் வாசலில் குப்பை தொட்டி வைத்து சேகரித்த குப்பைகளை தினமும் அகற்றப்பட வேண்டும்.  அவ்வாறு செய்த கடைகளின் உரிமத்தினை ரத்து செய்ய மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  எரியாத மின் விளக்குகள் அனைத்து பழுது நீக்கம் செய்யப்பட்டு புதிய மின் விளக்குகளை பொருத்த வேண்டும்.  தேவையற்ற ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். உணவு பண்டங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்வதை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து பேருந்துகளும் அதற்கான ஒதுக்கப்பட்ட பேருந்து கட்டைகளில் நிறுத்தப்பட வேண்டும்.  பொது மக்களுக்கு இடையூறாக பேருந்துகள் நிறுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு போக்குவரத்து கழகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தஞ்சாவூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் பல்வேறு மாவட்டங்களில் பொது மக்கள் வந்து செல்வதால் அவர்களுக்கு வேண்டிய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும். பயணிகள் உட்காரக் கூடிய இடத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தினால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் திரு.த.குமார், பொறியாளர் திரு.ஆர்.சீனிவாசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் செந்தில், நகரமைப்பு அலுவலர் திரு.கோவிந்தசாமி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
 
 

1 comment:

  1. //ஒவ்வொரு கடைகளிலும் வாசலில் குப்பை தொட்டி வைத்து சேகரித்த குப்பைகளை தினமும் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்த கடைகளின் உரிமத்தினை ரத்து செய்ய மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.//

    என்ன அநியாயம்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.