இந்த நிலையில் திமுக மீது இவர் காட்டி வரும் அதிக ஈடுபாட்டை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலோடும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர் ஆகியோரின் பரிந்துரை அடிப்படையில், திமுக மாநில கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் வாகை சந்திரசேகர் அவர்கள் திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளராக பழஞ்சூர் K. செல்வம் அவர்களை அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு திமுக தலைமையகத்தின் சார்பில் இன்று வெளியான முரசொலி நாளிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இதையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் அதிரை பேரூர் தலைவர் M.M.S அப்துல் கரீம், திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, திமுக பேரூர் இணை செயலாளர் தில்லை நாதன், அதிரை பேரூராட்சி கவுன்சிலர்கள், நூர்லாட்ஜ் செய்யது முஹம்மது, N.KS. முஹம்மது செரீப் ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பழஞ்சூர் K. செல்வம் அவர்களை நேரடியாக சந்தித்து சால்வை அணிவித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Vaalththukkal
ReplyDeletemanichudar savanna