.

Pages

Thursday, November 26, 2015

விபத்தில் சிக்கி சிகிச்சை பெரும் அதிரை வாலிபருக்கு எஸ்டிபிஐ கட்சி-அய்டா ரூ 45 ஆயிரம் மருத்துவ நிதி உதவி !

அதிரை நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மேஸ்திரி அப்பா வீட்டு காலஞ்சென்ற அஹமது ஹாஜா அவர்களின் மகன் பைசல் அஹமது ( வயது 30 ) மலேசியாவில் பணியாற்றி விட்டு இன்னும் சில வாரங்களில் தனக்கு நடக்க இருந்த திருமணத்திற்காக ஊர் வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிரையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வாகனம் சேண்டாக்கோட்டைஅருகே வந்த போது சாலையின் பள்ளத்தில் சிக்கி வாகனம் கவிழ்ந்து அருகே உள்ள மரத்தில் பலமாக மோதியது. இதில் வாகனத்தை ஓட்டிச்சென்ற பைசல் அகமதுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடியவரை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மூலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோமா ஸ்டேஜில் இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு சுமார் ரூ 4 லட்சம் வரை செலவு ஆகும் என கூறியுள்ளனர். ஏழ்மை நிலையில் இருக்கும் வாலிபரின் குடும்பத்தினர் சார்பில் நிதி உதவி கோரி இருந்தனர். இதுதொடர்பாக அதிரை நியூஸில் செய்தி வெளியிடப்பட்டது. இவற்றை பார்வையிட்ட உலகங்கிலும் உள்ள அதிரை மற்றும் வெளியூர் அன்பர்கள் நிதிஉதவி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிரை எஸ்டிபிஐ கட்சி மற்றும் சவூதி ஜித்தாவில் இயங்கும் அய்டா அமைப்பு ஆகியோர் இணைந்து விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாலிபரின் மருத்துவ நிதி உதவியாக ரூ 45 ஆயிரத்தை வாலிபரின் தாயாரிடம் வழங்கினார்கள்.

அப்போது எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ், அதிரை நகர தலைவர் முஹம்மது அஜார், துணைத்தலைவர் நடராஜ், செயலாளர் முஹம்மது இக்பால், முன்னாள் நகர தலைவர் அன்வர் ஆகியோர் இருந்தனர். மருத்துவ நிதிஉதவியை பெற்றுக்கொண்ட வாலிபரின் தாயார் நிதிஉதவி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.