தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (21.11.2015) 40 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
தஞ்சாவூர் ஊராட்சி பிள்ளையா,பட்டி ஊராட்சியில் மாவட்டம் முழுவதும் 40 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாண்புமிகு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
40 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்து மாண்புமிகு அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் 40 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு 34 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி முடிவடைந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் 14 ஊரட்சி ஒன்றியங்களில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகள், வீதிகள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், அரசு அலுவலக வளாகங்கள், சாலையோரங்கள் என மாவட்ட முழுவதும் மரக்கன்றுகள் நடப்படுகின்றது. அரசு அலுவலர்கள், தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள், அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வெப்பம், குளிர் ஆகிய சீதோஷ்ண நிலை மாறுபாடுகளை கட்டுப்படுத்துவதில் காடுகள் மிக முக்கிய பங்கு வசிக்கின்றன. இந்தியாவின் பரப்பளவு பொறுத்த வரையில் காடுகளில் பரப்பளவு 24 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு 13 சதவீதமாக உள்ளது. இது இந்தியாவில் காடுகளின் பரப்பளவில் 21வது இடத்தில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் காடுகளின் பரப்பளவு 5.71 சதவீதம் மட்டுமே உள்ளது. இது தமிழக காடுகளின் பரப்பளவில் 30 மாவட்டங்களில் 25வது இடமாகும். மலைகள் இல்லாத தஞ்சை மாவட்டத்தில் 33 சதவிகிதம் மரக்கன்றுகளை உருவாக்கிட ஒத்துழைக்க கேட்டுக் கொள்கிறேன். அப்பொழுது தான் மழை வளம் பெருகி, நீர்; வளம் உயர்ந்து மனித சமுதாயம் தழைதோங்கும். வனப்பகுதி பரப்பளவை அதிகரிப்பதன் மூலம் மழை பொழிவை அதிகரித்து நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
எனவே நமது மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் சுமார், 40 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது. மாபெரும் இத்திட்டத்திற்கு அடிப்படை தேவையான மரக்கன்றுகள் 14 ஒன்றியங்களில் 48 சிற்றூராட்சிகள் மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் சுமார் 40 இலட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்திட இலக்கு நிர்ணயம் செய்து, இத்திட்டத்தின் கீழ் 3.30 இலட்சம் தேக்கு மரக்கன்றுகள், 2.00 இலட்சம் வேம்பு மரக்கன்றுகள், 1.30 இலட்சம் புங்கன் மரக்கன்றுகள், 1.15 புளியன் மரக்கன்றுகள், 1 இலட்சம் பூவரசு மரக்கன்றுகள், 25 ஆயிரம் வேங்கை மரக்கன்றுகள், 15 ஆயிரம் வாகை மரக்கன்றுகள், 15 ஆயிரம் நாவல் மரக்கன்றுகள், 25 ஆயிரம் நீர் மருது கன்றுகள் உள்ளிட்ட மரக்கன்றுகள் நாற்றாங்கால் மூலம் உருவாக்கப்பட்டு மரக்கன்றுகளாக இன்று முதல் நடப்படுகின்றது. நடப்படும் மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரித்தலும், பாதுகாத்திடவும் பொது மக்கள் பங்களிப்பை அளித்திட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.பரசுராமன், சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.ரெத்தினசாமி (திருவையாறு), திரு.இரா.துரைக்கண்ணு (பாபநாசம்) மாநகராட்சி மேயர் திருமதி.சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.துரை திருஞானம், மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் திரு.வி.பண்டரிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திரு.மோகன், ஒன்றியக்குழு தலைவர் திரு.லெட்சுமணன், துணைத்தலைவர் திரு.சாமுவேல், நகர நிலவள வங்கி தலைவர் திரு.துரை.வீரணன், வல்லம் பேரூராட்சித் தலைவர் திரு.சிங் ஜெகதீசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி.தமிழ்செல்வி தனபால், ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.வசந்தா சைவராஜ், ஊராட்சி மன்ற தலைவர் தலைவர்கள் திருமதி.கௌசல்யா அனந்தன், திரு.கோவி.மனோகரன், திரு.குமார்,மாநகர மன்ற உறுப்பினர் திரு.சரவணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சீனிவாசன், செயற்பொறியாளர் திரு.சக்திமுருகன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் திரு.கோபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.குபேந்திரன், திரு.துரை, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மற்றும் முழுவதும் உள்ள பொது மக்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.