.

Pages

Wednesday, November 25, 2015

மறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் நேரில் சந்தித்து ஆறுதல் !

திமுக அதிரை பேரூர் அவைத்தலைவரும், அதிரை பேரூராட்சி 13 வது வார்டு உறுப்பினருமாகிய ஹெச். அப்துல் காதர் அவர்கள் நேற்று இரவு காலமானார்.  இவரது இறுதி சடங்கு இன்று பகல் 1 மணியளவில் நடைபெற்றது.

இந்த நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் மறைந்த ஹெச். அப்துல் காதர் அவர்களின் இல்லத்திற்கு நேரிடையாக சென்று குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். அப்போது அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கா. அண்ணாதுரை, ஏனாதி பாலசுப்பிரமணியம், பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபன், மேற்கு ஒன்றிய செயலாளர் பா. ராமநாதன், அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன் மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், ஜமாஅத் பிரமுகர்கள், அதிரை பேரூராட்சி அலுவலர்கள்- பணியாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மறைந்த திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் ஹெச். அப்துல் காதர் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கும் வகையில் அதிரை பேரூர் திமுக சார்பில் அதிரையின் பிராதன இடங்களில் உள்ள திமுக கொடிக்கம்பங்கள் அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.