மாருதி சுசூகி நிறுவனம் சார்பில் கார் கண்காட்சி அதிரை பெரிய ஜும்மா பள்ளி அருகில் இன்று காலை தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை விற்பனை துணை பொது மேலாளர் சார்லஸ் கிருபாகரன், தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை கிளை மேலாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாருதி சுசூகி நிறுவன முதன்மை வாடிக்கையாளர் ஏ. நிஜார் அஹமது அவர்கள் கண்காட்சியை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
கண்காட்சியில் மாருதி சுசூகி நிறுவன தயாரிப்புகளின் புதிய ரக கார்கள் அணிவகுத்து நின்றது. முதல் நாளான இன்று ஏராளமான கார் பிரியர்கள் வந்து பார்வையிட்டனர். கண்காட்சி இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி விற்பனை குறித்து தஞ்சை விற்பனை துணை பொது மேலாளர் சார்லஸ் கிருபாகரன் நம்மிடம் கூறுகையில்...
'மாருதி கார் திருவிழா இன்றும் நாளையும் நடைபெறும். கண்காட்சியில் கார்களை தேர்வு செய்து ஸ்பாட் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் உண்டு. பழைய கார்களை உடனடியாக எக்சேஞ் செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. குறைந்த முன் பணம், சுலப மாத தவணை என பல்வேறு விதமான கடன் சலுகைகளும் உண்டு. நாளை நிறைவடையும் கார் திருவிழாவை மாலை 5 மணி வரை பார்வையிடலாம்' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.