.

Pages

Monday, November 16, 2015

கடைத்தெரு உணவகத்தின் முன்பாக கொட்டிய திடீர் குப்பைகள்: போலீசார் தலையீட்டில் மீண்டும் அப்புறப்படுத்திய பேரூராட்சி ஊழியர்கள் !

அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிரை பேருந்து நிலையம் பழைய போஸ்ட் ஆபீஸ் - கடைத்தெரு பெரிய மார்க்கெட் பகுதி வரையிலான சாலையோர இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கடந்த [ 6-11-2015 ] அன்று மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வந்தது.

இந்த நிலையில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் கடந்த [ 8-11-2015 ] அன்று முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறவில்லை. தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பிறகு மீண்டும் மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடரும் என கூறப்பட்டது.

முன்னதாக பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடைத்தெரு பெரிய மார்க்கெட் பகுதி வர்த்தகர்கள் தங்கள் கடைகளின் முகப்பு பகுதியில் நீண்டுகொண்டு இருந்த தாழ்வாரங்களை தாங்களாக முன்வந்து அப்புறப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் கடைத்தெரு பிராதன சாலையில் அமைந்துள்ள தனியார் உணவகத்தின் முகப்பு பகுதியில் குப்பை கழிவுகளை அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் கொட்டிச்சென்றதால் இந்த பகுதியின் வர்த்தகர்கள் மற்றும் தமுமுகவினர் பெரும் அதிருப்தி அடைந்தனர். மழை தூறல் இருந்ததால் துர்நாற்றம் வீசி வந்தது. உடனே அதிரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை அதிகாரிகள் அய்யா துரை, ஜீவானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பொறுப்பு வகிக்கும் மேஸ்திரி நாடிமுத்துவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தான் குப்பை கழிவுகளை இங்குவந்து கொட்டச்சொன்னதாக கூறினார்.

அதிர்ச்சி அடைந்த காவல்துறை அலுவலர்கள், துப்புரவு பணியாளர் மேஸ்திரி நாடிமுத்து மற்றும் பணியாளர்களை கண்டித்து இதுபோன்ற தவறான செயலை இனிமேல் செய்ய வேண்டாம் என எச்சரித்து அனுப்பினார்கள். மேலும் கொட்டிய குப்பைகளை மீண்டும் அள்ளிச்செல்ல அவர்களிடம் அறிவுறுத்தினார்கள்.

இதையடுத்து பேரூராட்சி டிராக்டர் வாகனத்தில் வந்த துப்புரவு ஊழியர்கள் குப்பை கழிவுகளை மீண்டும் வாகனத்தில் அள்ளிக்சென்றனர். குப்பை கழிவுகளை அகற்றும் வரை சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணித்தனர். இந்த நிலையில் இந்த பகுதியில் கூட்டம் கூடியதால் வாகன நெருக்கடி ஏற்பட்டது. அதிகாலை நிகழ்ந்த இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் கூட்டத்தில் நின்ற வர்த்தகர்கள் சிலர் இந்த செயலை செய்தவர்கள் மீது அதிரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாக கூறி அங்கு நின்றிருந்த பொதுமக்களிடம் கையெழுத்தை பெற்றனர்.

குப்பை கழிவுகளை குறிப்பிட்ட தனியார் உணவகத்தின் முகப்பில் பேரூராட்சி ஊழியர்கள் கொட்டிச்சென்றது தொடர்பாக பேரூராட்சியோடு தொடர்புடையவர்களிடம் விசாரித்த வகையில்,
அதிரை பேரூராட்சி சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வர்த்தகர்களுக்கு கால அவகாசம் வழங்கிய போது, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடைத்தெரு பெரிய மார்க்கெட் பகுதி வர்த்தகர்கள் தங்கள் கடைகளின் முகப்பு பகுதியில் நீண்டு காணப்பட்ட தாழ்வாரங்களை தாங்களாக முன்வந்து அப்புறப்படுத்தினார்கள். இதில் கடைத்தெரு சாலையில் அமைந்துள்ள தனியார் உணவகத்தின் மேற்கூரை, புரோட்டா சுடும் அடுப்பு ஆகியன சாலையோர ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்ததாகவும், இவற்றை அப்புறப்படுத்தாமல் காலதாமதம் செய்ததால் இவர்களை எச்சரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

16 comments:

  1. ஹதீஸ்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார். அறிவிப்பவர் ஸயீத் பின் ஸைத் (ரலி), நூல்கள் : புகாரி (2452), முஸ்லிம் (3289)

    குப்பை கொட்டியதற்கே இந்த ஆரவாரம் என்றால் அந்த இடத்தில் உள்ள ஹோட்டல்காரன் மேலே உள்ள ஹதீஸின் பிரகாரம் நடந்தானா? யாராவது இதைக் கேட்டீர்களா? அந்த ரோட்டில் உள்ள அனைத்துக்கடைகளும் தங்களின் ஆக்கிரமிப்பை அகற்றி பொது மக்கள் தாராளமாக‌ நடமாட இடம் விட்டார்கள். இந்த ஊர் வந்து பொளைக்கிரவனுக்கு(மேலிலிருந்து மூன்றாவது,ஐந்தாவது படங்கள் வழுக்கை தலை உடைய, கைகட்டி இருப்பவர்) மட்டும் என்ன திமிரு?(போட்டோ 2 ஐ பார்க்கவும்) நடு ரோட்டிலே பரோட்டா அடுப்பை வைத்து சுட்டுக்கொடுக்கிறான் இந்த பரோட்டைவை காசு கொடுத்து வாங்க நாலு பேரு? குப்பையை அள்ளியாச்சு, அந்த அடுப்பை எப்ப இடுச்சு பொது மக்களுக்கு வழி விடுவீர்கள்?. பள்ளியிலிருந்து வரும் மாணவிகள் மாலை 5 மணிக்கு அந்த ஹோட்டலை கடந்து செல்வதற்குள் படாத பாடு படுகின்றனர்.இரவு நேரத்தில் வாகனங்கள் அந்த இடத்தை கடப்பதற்குள் சுப்ஹானல்லாஹ்!அல்லாஹ்தான் வழி அடைத்தனுக்கு நேர்வழி காட்டனும்.
    இந்த குப்பையை கொட்டியவுடன் அதனை அள்ள சொல்லி இந்த த.மு.மு.க வேற? இதே தமு.மு.க மேலே உள்ள ஹதீஸின் பிரகாரம் மற்றவர்களை போல் அந்த ஹோட்டலின் அடுப்பை இடிக்க சொல்ல வேண்டியது தானே? மார்க்கம் ஊருக்குதான், தனக்கு இல்லை அப்படிதானே.

    அனைத்து ஊடகங்களுக்கும் ஒரு கோரிக்கை இந்த ஹோட்டல், கிரானிக் கடை முக்கம் போன்ற இடங்களின் ஆக்கிரமிப்பை ( வாகனம் பெருத்த இந்த) ஊர் நலனுக்காக போட்டோவுடன் பதிவில் போட்டே ஆகவேண்டும்.

    ReplyDelete
  2. http://www.adiraixpress.in/2015/11/blog-post_81.html

    அதிரை பேரூர் நிர்வாகம் கடந்த மாதம் முதல் கடை தெருவில் இருக்கும் ஆக்கரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுத்தது .இருப்பினும் ஒரு உணவகத்தின் உரிமையாளர் ஆக்கரமிப்பு இடத்தில் உணவு தயாரிக்கும் கூடமாக உபயோகித்து வருகிறார் .இதனால் பேரூர் நிர்வாகம் இன்று காலை குப்பைகளை ஆக்கரமிப்பு இடத்தில் குப்பையை கொட்டியதாக கூறப்படுகிறது .இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது .இந்த நடவடிக்கை ஆக்கரமிப்பு பகுதியில் கடை உரிமையாளர் பரோட்டா அடுப்பை அகற்றாமல் தொடர்ந்து கடை நடத்தி வந்ததால் தான் மேற்கொள்ளப்பட்டது என பேரூர் நிர்வாகம் பதில் அளித்தது .மேலும் பேரூர் தலைவர் அவர்கள் உத்தரவின் பெயரில் தான் குப்பைகள் கடைக்கு முன்பு கொட்டப்பட்டதாக கடை உரிமையாளர் கூறியிருந்தார் .

    அதனை தொடர்ந்து சமுக ஆர்வலர் ஒருவரிடம் இது குறித்து விசாரித்த பொழுது கடை தெரு பகுதி அதிரையில் தினமும் பரபரப்பாக காணப்படும் ஒரு பகுதி மேலும் அதிரையில் வாகனம் அதிகளவில் பெருகியதால் இப்பகுதியில் வாகனம் ஓட்டி செல்ல மிக சிரமாக இருக்கிறது .பேரூர் நிர்வாகம் ஆக்கரமிப்பை அகற்றியதால் வாகனம் ஓட்டி செல்ல முடிகிறது .இருந்தாலும் கடை உரிமையாளர் ஆக்கரமிப்பு இடத்தில் கடை நடத்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது .மக்களில் நலனுக்காக ஆக்கரமிப்பை அகற்றிய பேரூர் நிர்வாகம் செய்தது சரியே ! சென்னை போன்ற இடத்தில் ஆக்கரமிப்பு இடத்தை காலி செய்யாத கடைக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் இதை போன்ற நடவடிக்கைகளை தான் செய்யும் .அடுத்தபடியாக ஆக்கரமிப்பு இடத்தை காலி செய்யாத கடை உரிமையாளர்களுக்கு நமதூரில் இருக்கும் சில சமூக அமைப்புகளில் இருக்கும் நிர்வாகிகள் ஆதரவாக இருப்பது மிகவும் வேதனை ! மக்கள் நலனுக்காக கடை தெருவில் இருக்கும் மற்ற ஆக்கரமிப்புகளை அகற்ற பேரூர் நிர்வாகம் துரிதமாக செயல் பட வேண்டும் என கூறி முடித்தார் .

    ReplyDelete
  3. Today itself it will destroy Insha Allah

    ReplyDelete
  4. Today itself it will destroy Insha Allah

    ReplyDelete
  5. அதிரையின் நடு நிலையான செய்தி ஊடகம் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளது ! உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பேருராட்சிதான் குப்பையை அங்கு கொட்டியது, இத சொல்லத்தெரியாமல் இருப்பதுதான் நடுநிலையா?

      Delete
  6. சகோதரர் முனீர் அஹமது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    என்னுடைய விமர்சனம் சம்பவம் குறித்தல்ல மாறாக உங்களுடைய பின்னூட்டம் குறித்து மட்டுமே!

    அல்ஹம்துலில்லாஹ், ஹதீஸை மேற்கோள் காட்டி கருத்திட்டுள்ளீர்கள் ஆனால் இப்படிபட்ட நல்ல உள்ளத்தில் ஜாஹிலிய்யா கால சிந்தனைகளை எப்படி நுழைய விட்டீர் என தெரியவில்லை. தயவுசெய்து, ஊர் வந்து பொளைக்கிரவனுக்கு (மேலிலிருந்து மூன்றாவது,ஐந்தாவது படங்கள் வழுக்கை தலை உடைய, கைகட்டி இருப்பவர்) மட்டும் என்ன திமிரு? என்ற உங்களுடைய கருத்தை திரும்பப்பெறுமாறும் அதற்காக வருத்தம் தெரிவிக்குமாறும் உங்களின் சகோதரனாக அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  7. சகோதரர் முனீர் அஹமது அவர்களுக்கு மக்கள் நலனுக்காக ஆக்கரமிப்புகளை அகற்றுவது சரியே அல்ஹம்துலில்லாஹ்.
    ஆனால் அதே மக்களுக்கு இடையுறு செய்யும் விதத்தில் குப்பைகளை ரோட்டில் கொட்டி செல்வது எவ்விதத்தில் சரியாகும்.

    ReplyDelete
  8. ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லி பேரூராட்சி நிர்வாகம் கேட்டபோதே அதை நிவர்த்தி செய்திருக்க வேண்டும், குப்பை கொட்டியத்தன் நோக்கம் பொதுமக்களை பாதிக்க செய்ய அல்ல என்ன ரியாக்சன் வருதுன்னு பார்க்க தான் செய்திருக்க கூடும். "கலகம் பிறந்தால் வழி பிறக்கும்" என்று சொல்லுவார்கள் அதனால தான் இந்த அதிரடி ஆக்சன் போல தெரியுது.

    எல்லாம் சரி தான்; இதே போல் திருட்டு தண்ணீர் விவகாரம் என்னாச்சு. அதற்கும் அதிரடி ஆக்சன் உண்டா ?

    ReplyDelete
  9. அதிரை தமிழன்
    பேருராட்சி நிர்வாகம் கடந்த 6/11/15/,7/11/15 ஆகிய இரு நாட்கள் எவ்வாறு ஆக்கிரமிப்பை அகற்றியதோ அதைபோல் இந்த கடையின் ஆக்கிரமிப்பை jcp கொன்டு தனக்கிருக்கும் அதிகாரதைக்கொன்டு அகற்றினால் யாரும் அதை தடுக்கப்போவதில்லை அதை விட்டு விட்டு பொது மக்கள் நடமாடும் மார்கெட் பகுதியில் துர் நாற்றம் வீசும் குப்பைகளை கொன்டு உணவகங்கள் முன்பாக கொட்டுவது எந்த விததில் நியாயம், அதிரை எக்ஸ்பிரஸ் தற்போதைய பேருராட்சி மன்றமும் அதன் தலைவரும் எது செய்தாலும் நியாயப்படுத்துவது ஒரு பக்க சார்பு அது உங்கள் உரிமை தயவு செய்து நடு நிலை என்று சொல்லிக்கொள்ளாதீர்கள் மேலும் ஒருவர் வீட்டு வரி செலுத்தவில்லை என்றால் அவ் வீட்டின் குடி நீர் இணைப்பையோ வடிகால்
    இணைப்பையோ துண்டிக்கலாம் அல்லது நீதி மன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் அதை விட்டு விட்டு அவ் வீட்டின் முன்பு துர் நாற்றம் வீசும் குப்பையையோ அல்லது சாக்கடையையோ வந்து கொட்டினால் சரியா உங்கள் வீட்டிற்க்கு இவ்வாறு நடந்தால் பேருராட்சி மன்ற நடவடிக்கையை சரி என்பீர்களா பேருராட்சி மன்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணீயை போற்றும் நீங்கள் அது சரியாகத்தான் நேர் கோட்டில் செய்கிறதா என்று அந்த ரோட்டை பார்த்துவிட்டு கொஞ்சமாவது மனசாட்சியோடு பதிவிடுங்கள்
    இப்படிக்கு
    முகம்மது கனி நகர சுற்று சூழல் அணி செயலாளர் தமுமுக அதிரை

    ReplyDelete
  10. Mr. Mohd. Gani, if you goto court. It will finish to take several year. You know Indian law. Indian civil law contain more holes. Please you mind it.

    ReplyDelete
  11. பேரூராட்சி அதன் கடமையை செய்ய அதர்க்கு முழு ஒத்துலைப்பை கொடுப்பதே சிறந்தது தக்வா பள்ளியை ஒட்டியே அதுவும் முன் வாசல் கிட்டயே குப்பையை மலை மாதிரி இருக்கு அல்லாஹ்வின் வீட்டை சுத்தி சுத்தமாக வைத்து அழகு பார்க்கிரதை விட்டு விட்டு மஸ்ஜிதின் வளாகத்தை நாற அடிக்கிற கேவலமான கூட்டங்கள்.பண்டிகை காலங்கலில் ஆடு கலை கொண்டு வந்து வைத்து மஸ்ஜிதின் வளாகத்தை நாற அடிக்கிற கேவலமானவர்கள் . 'தக்வாப் பள்ளி'க்குரிய இடங்கலை ஆக்கிரமிப்புச் செய்து கடை நடத்துவோரின் அடாவடித் தனத்தை த .மு .மு. க .கண்டித்தது உண்டா கடை முன்பு துர்நாற்றம் வீசும் தண்ணீர், குப்பைகளை கடை காரர்கள் கடைகள் முன்பு போடுவது எந்த விததில் நியாயம் இவை கலை த.மு .மு .க என்றவது தட்டி கேட்டது உண்டா த.மு.மு.க கையெழுத்து வேட்டை நடத்துவது காழ்ப்புணர்வா, போது நலமா, அரசியல,அல்லாஹ்க்கும் மறுமைக்கும் அஞ்ஜி கொல்ளுங்கள் ஊரின் வளர்ச்சிக்கு மார்கெட் சாலையின் விரிவாக்கத்துக்கு முழு ஒத்துலைப்பை கொடுப்பதே கால சிறந்தது

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அழைக்கும்
    சகோதரர் முகமது சபி சொல்வது ஆதரிக்க கூடிய செய்தி.

    சகோதரர் அதிரை அமீன் கருத்து அவமதிக்ககூடியது .அவருடைய தலைப்பே சரியற்றது.

    இதில் பேரூர் நிர்வாகம் இன்னும் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது என் கருத்து.

    சகோதரர் அஜ்மாஸ் பாருக் என்ன சொல்கிறார் ஆக்கிரமிப்பை அகற்ற இயலாது என்கிறாரா.

    ஏன் கையில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு சுணக்கம் காட்டுகிறது நிர்வாகம்

    ஓன்று பட்டு உண்டு வாழ்வோம்
    சகோதரர் பாருக்கு அவர்களுக்கு உங்கள் ஆக்கிரமிப்பை அகற்றி வழி கொடுப்பது நல்லது .வஸ்ஸலாம்

    ReplyDelete
  13. Assalamu alaikkum Town panchayath already announced to remove there extended place volentery . so all shop owners removed their extended places volentery , but this hotel only not remove volentery why? Why this hotel only waiting for town panchayath.?

    ReplyDelete
  14. ஹதீஸ்:மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
    (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
    இந்த சம்பவத்தில் அடிப்படை (அறிவு) கூட அறியாத முனீர் தனது பின்னூடட்த்தில் தனி மனித தாக்குதலுக்கு அதிக முக்கிம் கொடுத்து கருத்து கூறியிருப்பது கண்டிக்கதக்கது. இஸ்லாத்தின் அடிப்படை கூட
    கூட தெரியாத(வனுக்கு) முனீருக்கு ஹதிஸை மேற்கோள் காட்ட எந்த தகுதியும் இல்லை.
    ஹதீஸ்:“முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்” (அல்-குர்ஆன் 49:6)

    ReplyDelete
  15. அன்பார்ந்தவர்களே தயவு செய்து சொந்த கோப தாபங்களை, அரசியல் காழ்புணர்வுகளை வைத்துக்கொண்டு நல்ல காரியங்கள் நடக்கும்பொழுது ஒத்துழைக்க வேண்டும் என்று ஹோட்டல் உரிமையாளரிடம் சொல்வதை விட்டு விட்டு, ஆக்கிரமிப்புகளுக்கு துணை போனால் இதில் என்ன நியாயம் இருக்கிறது? தயவு செய்து நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்த பழகுவோமாக.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.