தஞ்சாவூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக 400 இடங்களில் நிலவேம்புக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.
தஞ்சாவூர் கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை நிலவேம்புக் குடிநீர் வழங்கும் பணியைத் தொடக்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக தமிழக முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும், தமிழகம் முழுவதும் 5 நாள்களுக்குச் சுகாதாரத் துறை மூலம் நிலவேம்புக் குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என மொத்தம் 400 இடங்களில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் உள்ளவர்களும், இல்லாதவர்களும் நிலவேம்புக் குடிநீரைப் பருகலாம்.
நாட்டு மருத்துவ முறையில் 9 மூலிகைப் பொருட்கள் மூலமாக நிலவேம்புக் குடிநீர் கொடுக்கப்படுவதால், காய்ச்சல் வராமல் தடுக்கப்படுகிறது. சிறிது கசப்பாக இருந்தாலும் இதைப் பருகுவதன் மூலம் உடலில் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. எனவே, தொடர்ந்து 5 நாள்களாக வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீரைப் பொதுமக்கள் பருக கேட்டுக் கொள்கிறேன்.
ஏடிஎஸ் என்னும் வகையைச் சேர்ந்த வைரஸ் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இது மழைக்காலம் என்பதால், காய்ச்சல் வராமல் இருக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடும் காய்ச்சல், உடல் சோர்வு, கண்களின் பின்புறத்தில் வலி, கை, கால் கணுக்களில் வலி, சுவையில் மாற்றம், வறண்ட தொண்டை, பல் ஈறுகளில் ரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) ம. சிங்காரவேலு, மாநகராட்சி ஆணையர் த. குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.