.

Pages

Sunday, November 15, 2015

வடகிழக்கு பருவ மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு !

தஞ்சாவூரில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திருவையாறு, கண்டியூர், கண்கரையம், மண்ணியாறு, களஞ்சேரி ஆகிய பகுதிகளில் பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வின் போது தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்திரவிற்கிணங்க வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்துத் துறையினரையும் ஒருங்கிணைத்து பொது மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.   காவிரி, வெண்ணாறு கோட்டங்களை சேர்ந்த பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு செயற்பொறியாளர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

மாண்புமிகு தமிழக முதல்வர் உத்திரவிற்கிணங்க சிறப்பு கண்காணிப்பு அலுவலர் திரு.சத்தியகோபால் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி ஆய்வுகள் செய்யப்பட்டு  தேவையான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் திட்ட இயக்குநர் அவர்கள் தொடர்ந்து ரோந்து பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏதேனும் வீடுகள் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டு மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவுறுத்தியவாறு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை காவேரி கோட்டம், வெண்ணாறு கோட்டம், ஆக்னியாறு கோட்டம், கல்லணைக் கால்வாய் கோட்ட செயற்பொறியாளர்களுக்கு தாழ்வான பகுதிகளில் மணல் மூட்டை கொண்டு தடுப்பு அமைத்திட, மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் துரித நடவடிக்கை எடுத்திட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மழை வெள்ளக் காலங்களில் மின்சார தடை ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலான சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுடன் தேவையான மருந்து பொருட்களுடன் அனைத்து அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளக் காலங்களில் மின்தடை ஏற்படும் பொழுது குடிநீர் தட்டுபாடின்றி விநியோகம் செய்திட வேண்டும் என்றும் தேவைப்பட்டால் ஜெனரேட்டர் மூலம் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து வருவாய் கோட்ட அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், தாழ்வான மற்றும் மழை வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளை கூட்டாக சென்று ஆய்வு செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய இடங்களை கண்டறிந்து பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்திடவும், அத்தியாவசிய உணவுப்பொருட்கள்  அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திற்கும், துணை ஆட்சியர் நிலையில் ஒரு மண்ட அலுவலரும், ஒன்றிய அளவில் உதவி இயக்குநரும், 50 குறு வட்டங்களுக்கு வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  அவர்கள் அந்த பகுதியில் ஏற்படும் வெள்ள சேதங்களை பற்றி உடனுக்குடன் தெரிவிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு மழையினால் சம்பா பயிர் பாதிப்புகள் இல்லாத மழை நீர் வயல்களில் தேங்காத வகையில் வடிகால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகின்றது.  பொது மக்களுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில் 1077 என்ற தொலைபேசி எண்ணில் தகவல்களை தெரிவிக்கலாம். அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் கடலுக்கு செல்லும் பொழுது கரையோரப்பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ள சிறப்பு முகாம்களில் தகவல்களை பெற்று கடலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   30 கிராமங்கள் தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டு அவர்கள் தேவையான பாதுகாப்பான முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள களப்பணியாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.  பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்தழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.   இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக திருவையாறு கண்டியூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு மணல் மூட்டைகளையும், கண்கரையம் காவிரி ஆற்றுக்கரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரையை மேம்படுத்து பணியினையும், காவிரி உபரி ஆறான மண்ணியாறு தலைப்பையும், அங்கு வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளையும், களஞ்சேரி வெண்ணியாறு வலது கரையில் மேற்கொள்ளப்பட்டு கரை மேம்பாட்டு பணியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது பயிற்சி ஆட்சியர் திரு.ஜேக்கப் தீபக், காவிரி கோட்ட செயற்பொறியாளர் திரு.கந்தசாமி, வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி செயற்பொறியாளர்கள் திரு.இளங்கோவன், திரு.வரதராஜன், உதவி பொறியாளர் திரு.சிவக்குமார், தி.ருமதி.ராமாபிரபா ஆகியோர்  உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.