என தேசிய துப்பரவு ஆணையத் தலைவர் திரு. எம். சிவண்ணா அவர்கள் அறிவுரை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சிகளில் கழிவுகளை அகற்ற இயந்திரங்களை பயன்படுத்துதல் மற்றும் துப்பரவுப் பணியாளர்களின் மறுவாழ்வு குறித்த ஆய்வுக் கூட்டம் தேசிய துப்பரவு பணியாளர்கள் ஆணையத் தலைவர் திரு. எம். சிவண்ணா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன் அவர்கள் முன்னிலையில் இன்று ( 16.11.2015 ) நடைபெற்றது.
கூட்டத்தில் தேசிய துப்பரவு பணியாளர்கள் ஆணையத் தலைவர் திரு. எம். சிவண்ணா அவர்கள் தெரிவிக்கையில்...
மனித கழிவுகளை மனிதர்கBள அகற்றும் நிலையை முற்றிலும் ஒழிக்க பல்வேவறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் துப்பரவு ஆணையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வாணையம் துப்பரவுப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களை கண்காணிக்கவும், அவர்களின் நலனை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துப்பரவு பணியில் ஈடுபடும் பணியாளர்கள், உடல்நிலை காரணமாக 50 ஆண்டுகள்கூட வாழ்வதில்லை. அனைத்து உள்ளாட்சிகளிலும் மனித கழிவுகளை ஆளில்லா முறையில் அகற்றுவதற்கு தேவையான சாதனங்களை பயன்படுத்திடவும், குறைந்தபட்சம் பத்தாயிரம் மக்கள் தொகைக்கு தலா ஒரு கழிவு நீரை உறிஞ்சி எடுக்கும் இயந்திரம் என்ற கணக்கில் இயந்திரங்களை பயன்பாட்டில் கொண்டிருக்க வேண்டும்.
துப்பரவுப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு முழங்கால் வரை பாதுகாக்கக்கூடிய காலணிகள், கையுறைகள், முகமூடிகள், கவசம், மழை கோட் ஆகியவை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஆறுமாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றும் தடை செய்யும் சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பிணையில் வெளி வரமுடியாத சட்டப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், குற்றம் நிருபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ. 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. என். எம். மயில்வாகணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு. என். சீனிவாசன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கழிவு நீர் தொட்டிக்குள் ஆக்சிஜன் உள்ளதா, நைட்ரஜன் சல்பைடு ( நச்சு வாயு ) உள்ளதா என்பதை அறிய கருவிகள் இருக்கின்றன அதை பயன்படுத்தாமல் பல துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பொழுது இறப்பு ஏற்படுகிறது அல்லது அவர்களின் ஆயுள் குறைகிறது.
ReplyDeleteமனித கழிவுகளை அகற்ற தடை விதித்த பின், இயந்திரங்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது, சில இடங்களில் இன்னமும் இருக்கு. பெருநகரங்களில்: பாதாளக் சாக்கடையில் மனிதனே இன்னமும் இரங்கி வேலைசெய்கிறான். இந்தியா ஒன்றும் நிலவிற்கு போய் கப்பல் விடவேண்டாம். பணக்கார நாடாக வேண்டாம். முதலில் மனிதனாகுவோம். இந்த அவலத்தை அடியோடு நீக்குவோம்.