.

Pages

Monday, November 23, 2015

கடிதம் மூலம் உணர்வை வெளிப்படுத்திய 'காயல்' ஏ.எம் பாருக் !

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அழைக்கும்.
இத்துடன் சென்னை மண்ணடி பகுதியில் புதுத்தெருவில் 9/17 கதவிலக்கம் உள்ள வீட்டில் வசிக்கும் காயல்பட்டணத்தினைச் சார்ந்த ஏ. எம். பாருக் என்பவர் உலக, இந்திய, தமிழக இன்றைய நிலை பற்றியும் அவருடைய ஆதங்கத்தினையும் கூடிய 20.11.2015 தேதியிட்ட கடிதத்தினை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். உங்களுடை கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.

அன்புள்ள முகமது அலி அண்ணன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்!

முக்கியம் தாங்கள் எழுதிய 'சமுதாய பிரட்சனைகளும், தீர்வுகளும்' என்ற  புத்தகம் சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் மூலம் கிடைத்து வாசித்தேன். சூப்பர். அல்ஹம்து லில்லாஹ்!

அதில் நம் இஸ்லாமிய சமூதாயத்திலும், நம் நாட்டிலும், உலக அளவிலும் மலிந்துள்ள அவலங்களையும் விரிவாக குறிப்பிட்டிருந்தீர்கள்.

நம் சமூதாயத்தின் சீரழிவிற்கு காரணம்-35-50 கூட இருக்கலாம். இப்படி ஆளாளுக்கு இயக்கங்கள் துவக்கி ஈகோவால் இவர்கள் பற்றி அவர்களும், அவர்கள் பற்றி இவர்களும் ஆனா, ஆவன்ன, ஈனா, ஈயன்னா என பல பெயார்களை வைத்துக் கொண்டு, வசைபாடி, அதை, இதைச் சொல்லி பண வசூல் செய்து, தமது நிலையில் சொகுசாக வாழ்கின்றனர். அவர்களில் யாருக்குமே நம் சமுதாய முன்னேற்றத்திற்கான உருப்படியான காரியங்கள் செய்ததாகக் காணோம்.

நம் தமிழ்நாட்டினைப் பொருத்தமட்டில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின் சீரழிவு ஆரம்பம் . மது, லாட்டரி, இலவசங்கள், சினிமாவுக்கு வரிவிலக்கு, தலைவர், தலைவிக்காக உயிர் விட்ட கழிசடைகளுக்காக இழப்பீடு இப்படி லக்ஷக்கணக்கில், எதற்கும், யாருக்குமே பயனில்லாதவர்களுக்கு சிலை, மணிமண்டபம், பிறந்த நாள், நினைவு நாள் விழா என இப்படி கோடிக் கணக்கில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப் படுகிறது.

மேலும் நமது தாய்நாடு இந்தியாவைப் பொறுத்தவரை B.J.P, V.H.P, R.S.S, Siva Sena போன்ற காவி பயங்கர ஹிந்துத்வா கட்சிகள் முஸ்லிம்களுக்கு அடுத்தடுத்து துவேசத்தைப் பரப்பி பல இடங்களில், பல விதங்களில், பலவித பயங்கர தாக்குதல்கள் (அரசு, காவல்த் துறை கூட்டாக இணைந்து ) நடத்தி முஸ்லிம்களின் உயிர், உடமைகளுக்கு பல ஆயிரம், லக்ஷம், கோடிக் கணக்கில் பேரிழப்புகள் துணிந்தே செய்கின்றனர். பாதிக்கப்பட்ட நமக்கு ஏதோ பெயரளவில் நஷ்டஈடு வழங்கி அந்த கொலைகார, கொள்ளைக்காரர்களுக்கு எந்த தண்டனையும் விதிக்கப்படுவதில்லை. அப்படியே ஏதும் தண்டனை எனில் வழக்குகள் 15, 20 வருடம் என நடந்து கைது, ஜாமீன், விடுதலை என நடக்கும்.

அதே சமயம் சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டப் பட்டவர் முஸ்லிம் எனில் கைது, கடும் விசாரணை, சிறையில் வன் கொடுமை, ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை என துரிதமாக அப்பாவி முஸ்லிம்கள் கூட தண்டிக்கப் படுகிறார்கள். நம் நாட்டில் முஸ்லிம்களுக்கு சோதனை காலம்.

அல்லாஹ்விடம் நமது பாதுகாப்புக்கு இருகை ஏந்தி துவா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நம்மை பாதுகாக்க அவன் ஒருவனே போதுமானவன். நமது ஈமான் மிகவும் பலவீனமாக, சரீஅத்துக்கு புறம்பாக நாம் நடப்பதால் அநியாயக்கார ஆட்சியாளர்கள் நம்மீது போடப் பட்ட தண்டனை.

மேலும் உலகளவில் அமேரிக்கா, இஸ்ரேயில், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற யஹூதி-நாசகார கொடுங்கோலர்கள் , முஸ்லிம் நாடுகளில்(எகிப்து, லிபியா, துனிஸ், ஏமன், ஈராக், ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான்) பல பொய் காரணங்களை சாட்டி, அத்து மீறி புகுந்து அந்நாடுகளை இன்னும் 40,50 ஆண்டுகள் இன்னும் சீர் செய்ய முடியாத அளவிற்கு சீரழித்து விட்டனர். அரபு நாடுகளை யஹூதிகள் அடிமைகளாக்கி ட்ரில்லியன் டாலர்கள் அளவில் கொள்ளை அடித்து அவர் தம் நாடுகளை வளமாக வைத்துள்ளனர்.

அநியாயமாக ஈராக் அதிபர் சதாம் ஹுசைனுக்கு தூக்குத் தண்டனையும், லிபியா அதிபர் முஆம்மர் கடாபியை சுட்டுக் கொன்றும், மேலே எழுதிய பிற நாட்டு முஸ்லிம் தலைவர்களை நாட்டை விட்டு விரட்டி, அந்நாடுகளில் மக்கள் நிம்மதியாக அமைதியாக வாழ வழியில்லாமல் செய்து விட்டனர். உலக அழிவு நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது.

அல்லாஹ் முஸ்லிம்களை சகல சோதனைகளை விட்டும் காப்பாற்றுவானாக, ஆமீன். தாங்களும் துவா செய்து கொள்ளுங்கள், மற்றவை பின் வஸ்ஸலாம்.

1 comment:

  1. நமது இந்திய திருநாட்டில் உண்மையான தீவிரவாதிகளை களை எடுப்பதில் தண்டிப்பதில் முஸ்லிம்களுக்கு எந்த வருத்தமும் இல்லை ஆனால் நமது நாட்டில் நடப்பது என்ன? அப்பாவிகள் பலிக்கடாக்களாக ஆக்கப்படுகின்றனர் சிறுபான்மை முஸ்லிம்கள் அநியாயமாக தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுகின்றனர், உதாரணத்திற்கு இஸ்ரத் ஜஹான், சொராபுதீன் ஷேய்க், போன்ற எண்ணற்ற பல போலி என்கவுண்டர் இந்தியாவில் நடைபெற்றுவருகிறது, ஒரு இனத்தையே பழிவாங்கும் அல்லது அழிக்கும் முயற்சியில் இந்தியா வின் புற்றுநோய் என்றழைக்கப்படும் பாசிசம் பாசிசவாதிகள் அரச பயங்கரவாதத்தை முன்னின்று நடத்தி வருகின்றார்கள். அணைத்து துறைகளிலும் பாசிசம் தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்து இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் இஸ்லாமிய கிறிஸ்துவ இன மக்களை கொன்றொழிக்கும் நடவடிக்கைக்கு இந்த தீவிரவாத எதிர்ப்பு எனும் ஒரு வார்த்தையை கொண்டு, மக்களை கொன்றொழித்து வருகிறது உண்மை.

    யஹூதிகள் முஸ்லிம் நாட்டை துவசம் செய்து தங்கள் நாட்டில் அகதிகளாக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் அதன் விளைவாக தீவிரவாதிகள் உருவாக காரணமாகி விட்டது.

    இஸ்லாமியர்களின் தற்பொழுதைய நிலைமை தத்ருபமாக கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது அருமை. எழுத்து போர்வாளை விட கூர்மையானது என்று சொல்வது போல் உள்ளது தங்களது படைப்பு -வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.