.

Pages

Tuesday, November 24, 2015

துபாய் குடியிருப்பு கட்டிடங்களில் பயங்கர தீ விபத்து !

துபாயின் தேரா பகுதியில் சற்று முன்னர் இரு 5 மாடி கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. துபாயின் தேரா பகுதியில் சலாவுதீன் சாலையில் உள்ள கிரவுன் ப்ளாசா மாலுக்கு அருகே உள்ள இரு 5 மாடி கட்டிடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த இரு மாடி கட்டிடங்களும் தற்போது முழுவதுமாக எரிந்து கொண்டுள்ளன. இக்கட்டிடங்கள் முராகாபாட் போலீஸ் நிலையம் முன்பாக உள்ளன.  இதன் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பிடித்த தீ கட்டிடங்களுக்கும் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த தீ விபத்து இந்திய நேரப்படி இரவு 7.25 மணிக்கு நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்தில முகாமிட்டுள்ள ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கட்டிடங்களில் இருப்போரை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவரை பாதுகாப்பு படைவீரர்கள் மீட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் க்ரீன் லைன் பகுதியில் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 3.30 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.