.

Pages

Thursday, November 26, 2015

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மஹல்லாவாசிகளுக்கு அழைப்பு !

அஸ்ஸலாமு அல்லைக்கும்!

அன்பான சகோதரர்களே!   நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் பொது குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் [ 04-12-2015 ] அன்று வெள்ளிக்கிழமை  மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஹோர் அல்அன்ஜ்  ஹபீப் பேக்கரி அருகே உள்ள சகோதரர் அன்வர் அவர்களுடைய இல்லத்தில் நடைபெறும்.

அமீரகத்தில் இருக்கும் கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு.

6 comments:

  1. தயவு செய்து, இந்தக் கந்தூரிக் களியாட்டத்திற்கு ஒரு முடிவு கட்டுங்கள் சகோதரர்களே!

    நீங்கள்தாம் எதிர்வரும் சமுதாயத் தலைவர்கள்; காவலர்கள்; போதகர்கள்; புரட்சியாளர்கள்!

    கந்தூரி, கூடு, கொடியேற்றம் போன்ற அனாச்சாரங்களை அடியோடு அகற்றி, மாற்றுமத இணைவைப்புக் கலாச்சாரத்தைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுங்கள். அல்லாஹ்வின் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு. நம்புங்கள்!

    ReplyDelete
    Replies
    1. எல்லா அனாச்சாரங்களுக்கும் முத்தாய்ப்பாக தனி மனித ஒழுக்ககேடுகள் பெருகிவிட்டன. இதைப்பற்றி நம்மூர் முகல்லாவாசிகள் அறிகிறோமா? அல்லது கண்டும் காணாதது போல் இருக்கிறோமா? There is going to be big disaster in individuals purity of discipline and it will be worst of any other important issues in our community. Please reply to my comment if you have true concerns about our community.

      Delete
  2. அகமது காக்கா இன்ஷா அல்லாஹ் வருகின்ற வருடம் அதற்கான முயற்ச்சி மேற்கோள்ளப்படும். மேலும் இதை தடுத்து நிறுத்த ஊரிலுள்ள அனைத்து முஹால்லா வாசிகளின் ஒத்துழைப்பும் அவசியம் ஒவ்வொரு முஹால்லா வாசிகளும் தங்கள் தெருவுக்குள் இந்த கந்துரி ஊர்வளம் வரவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டும்

    ReplyDelete
  3. நல்வரவு, தம்பி ஜாகிர். ஒன்றுபடுவோம்! ஒத்துழைப்போம்! இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  4. கந்தூரி ஊர்வலம் தடை செய்யப்பட்ட தெருவிலெல்லாம் டிவி கேபிள் இன்னமும் ஏன் அறுக்க வில்லை, மாடிவீட்டுகளில் டிஷ் டிவி ஏன் அகற்ற வில்லை ? அவர்களெல்லாம் செய்திகள் பார்த்தவுடன் குரான் - ஹதீஸ் சொற்பொழிவுகள் கேட்கிறார்களா ? குறைந்த பட்சம் நவீன குளத்தில் அரை நிர்வாணத்துடன் குளிப்பவர்களை கண்டித்து கருத்து பதியலாமே! கந்தூரி எதிர்பாளர்கள் அந்தக் காலத்தில் பார்த்ததைப் போலவா இன்று இருக்கு எவ்வளவு மாற்றம். கந்தூரி போல் இல்லை ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி போல் உள்ளது, இன்னமும் சமுதாயத்தில் சமத்துவம் இல்லை இதை சஹன் சாப்பாட்டில் காணலாம் வேற்றுமை களைய ஏதாவது முயற்சி உண்டா ?

    ReplyDelete
  5. சகோதரர் மஸ்தான் அவர்களே கந்துரி தடைசெய்ய பட்ட வீட்டிற்குள் சென்று கேபிள் டிவி பார்க்க வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை இது அவர்கள் விட்டிற்குள் நடக்க கூடியவை ஆனால் கந்துரி அப்படி அல்ல இது பொது இடத்தில் பொது மக்களின் பணத்தை வசூல் செய்து வீண் விரையம் செய்யப்படுகிறது.

    ஒரு சிலர் இந்த கந்துரி ஊர்வலத்தை அனுமதித்து இதற்கு ஆதரவு தெரிவித்து அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.