அதிராம்பட்டினம், நவம்பர் 14
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கன்னந்தாங்குடி கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இன்று திருச்சியிலிருந்து பிவிசி பைப், இரும்பு, மளிகை சாமான்கள் உள்ளிட்ட பலசரக்கு பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு ஊர்களுக்கு சென்று விநியோகித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிரை கடற்கரைத்தெரு பகுதியில் உள்ள கடைகளுக்கு சாமான்களை விநியோகிக்க வந்தபோது கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மைதானத்தின் அருகே உள்ள மண் சரிவில் சிக்கி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எவ்வித காயங்கள் ஏற்படவில்லை. லாரியில் உள்ள பலசரக்கு சாமான்கள் கீழே கொட்டியது. அதிரையில் அதிகாலை முதல் தொடர்மழை பெய்து வருவதால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டன.
தகவலறிந்த அப்பகுதி இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கி உள்ளனர். அதிரையில் அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருவதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
விபத்து குறித்து அப்பகுதியினர் நம்மிடம் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை பேரூராட்சியின் சார்பில் குடிநீர் விநியோகிக்கும் பிராதான குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்வதற்காக பள்ளம் தோண்டும் பணி நடந்தது. பணிமுடிந்து தோண்டிய பள்ளத்தை முறையாக மூடாததால் பலசரக்கு சாமான்களை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. அதிரை பேரூராட்சியின் மெத்தன போக்கே இந்த விபத்திற்கு காரணம். தோண்டிய பள்ளத்தை முறையாக மூடி இருந்தால் இந்த விபத்தை தவிர்த்து இருக்கலாம்' என்றனர்.
லாரி கவிழ்ந்து விபத்து நடப்பதற்கு முன்னதாக இந்த பகுதியின் படம்

லாரி ஓட்டுனர் மகாலிங்கம்
அதிரை பேரூராட்சி சார்பில் பழுதடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய பள்ளம் தோண்டி இருந்த போது எடுத்த படம்
லாரி கவிழ்ந்து விபத்து நடப்பதற்கு முன்னதாக இந்த பகுதியின் படம்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.