இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திடீரென இவரது கால்கள் செயல் இழந்து நடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளார். போதிய வசதிமின்மையால் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் இவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசாமாகி போவதை அறிந்த இவரது குடும்பத்தினர் நமதூர் மருத்துவர் டாக்டர் அப்துல் ஹக்கீம் அவர்களிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அப்துல் ஹக்கீம் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. அங்கு இவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இதன் முடிவுக்காக காத்திருக்கிறார். பரிசோதனை முடிவில் இவரது நோயின் தன்மை குறித்து தெரியவரும். இவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து கவனித்து வருகின்றனர்.
மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சை - மருத்துவ பரிசோதனை மற்றும் இதர செலவீனங்களுக்காக போதிய நிதியை திரட்ட முடியாத சூழ்நிலையில் இருப்பதால் இவரது பெற்றோர் நம்முடைய உதவியை நாடி வந்துள்ளனர்.
உயிருக்கு போராடி வரும் இந்த ஏழை சகோதரனின் மருத்துவ சிகிச்சைக்காக நாம் தாராளமாக உதவதன் மூலம் நம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் இறைவனின் நற்கூலியை பெறுவோம்.
நிதி உதவி கோரி ஜெஹபர் சாதிக் குடும்பத்தினர் நம்மிடம் வழங்கிய வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : JAKAPAR SATHIK M
Bank Name : INDIAN OVERSEAS BANK
Branch : PATTUKKOTTAI BRANCH
A/C No. 088801000032242
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 8489861557 ( நோயாளியின் உறவினர் )
Asslamuallaikum,
ReplyDeletePlease correct A/c Name : JAKAPAR SATHIK M
Walaikkum Mussalaam
DeleteIt's corrected
Zazak allah brother
Delete