.

Pages

Tuesday, November 24, 2015

குறைந்த கட்டணம் செலுத்தி இ-சேவை வசதியை பெற அழைப்பு !

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.  இந்த இ-சேவை மையங்கள் மூலமாக தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் சமூக நலத்துறை சார்ந்த பல்வேறு சேவைகள் இணைய வழி சேவை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் இந்த சேவை மையங்கள் மூலமாக பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, ஆதார் அட்டை பதிவு செய்யும் போது தெரிவிக்கப்பட்ட செல்போன் எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதியும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

அவ்வகையில், தற்போது புதியதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தரப் பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல் மற்றும் விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகள் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேற்படி சேவைகளை பெற இ-சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களின் விவரங்கள் பின்வருமாறு :-
1) நிரந்தரப் பதிவு செய்ய ரூ. 50/-
2) தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ. 30/-
3) விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ. 5/-
4) விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற ரூ. 20/-

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு செலுத்த வேண்டிய நிரந்தரப் பதிவு கட்டணமான ரூ.50/- மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களிலேயே செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  பணம் செலுத்துவதற்கான ஒப்புகைச் சீட்டினையும் உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த சேவைகளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.