.

Pages

Thursday, November 26, 2015

ஆபத்தான சேர்மன் வாடி மின்கம்பம் மாற்றி அமைப்பு: மகிழ்ச்சியில் மக்கள் !

அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் சேர்மன் வாடி பஸ் நிறுத்தம் அருகில் சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் ஆபத்தை தரக்கூடிய வகையில் சாய்ந்து விழும் நிலையில் இருந்தது. எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் இருப்பதாக பலமுறை சம்பந்தபட்டோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த பகுதியில் காலை நேரங்களில் அதிகமான கட்டுமான ஊழியர்கள் வேலைக்கு செல்வதற்காக கூடுவார்கள். அதே போல் வெளியூர் செல்வதற்காக அதிகமான பயணிகள் இங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு வருகை தருவார்கள். இதனால் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக காணப்படும். இந்தப் பகுதி வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக வந்த கண்டெய்னர் லாரி மின்கம்பத்தில் சிக்கி மிகவும் சிரமத்துடன் மீட்கப்பட்டது.

அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்துவந்த தொடர் மழை காரணமாக மின்கம்பம் சாய்ந்து கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்வாரிய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆவலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அலுவலர்களிடம் தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக பத்திரிகைகள் மற்றும் இணையதள ஊடகங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் சாய்ந்து நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் அதிரை மின்சார வாரிய உதவி பொறியாளர் பிரகாஷ் மேற்பார்வையில் மின்சார வாரிய ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிக்காக ஜேசிபி வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டுள்ளன. புதிய மின்கம்பதை மாற்றிய பிறகு இந்த பகுதிகளுக்கு மின்இணைப்பு மீண்டும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணிகளை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் நேரில் பார்வையிட்டார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்திய அதிரை மின்சார வாரியத்திற்கு நன்றி கூறினார். இந்த பகுதியில் புதிய மின்கம்பம் மாற்றியமைப்பதை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.