இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அதிராம்பட்டினம் பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. கடலோரப்பகுதியான இந்த பகுதியை சுற்றி சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முன்னச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சாக்கடை கால்வாய் தூர்வாருதல், பிளிச்சிங் பவுடர் தெளித்தல், கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால் மழைகாலம் முடியும் வரை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் நிலவேம்பு கசாயம் பவுடர் மற்றும் நிலவேம்பு கசாயம் தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க உத்தரவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள் சேர்மன் அஸ்லாம் அவர்களே ...
ReplyDeleteஊரின் தற்போதைய மழை மற்றும் கொசு தொல்லைகளால் பெரும்பாலோருக்கு ஜுரம் சிலருக்கு டெங்கு காய்ச்சல் கூட இருப்பதாக அறியப்பெற்றோம். இது போன்ற முன் எச்சரிக்கை மருந்துகள் மருத்துவ மனையில் போதிய இருப்பில் இருப்பது மிகவும் அவசியம் .
மழை காலங்களில் குப்பைகளை தேங்க விடாமல் அப்புறபடுத்தவும். இதற்கு பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுக்கவும் .