.

Pages

Wednesday, November 18, 2015

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் !

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 28 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/11/2015 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-
கிராத்                    : சகோ. அப்துல் காதர் ( உறுப்பினர் )
முன்னிலை       : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை     : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )
சிறப்புரை              : சகோ.  A.M.அஹமது ஜலீல் (துணை செயலாளர்)
அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை     : சகோ. சாதிக் அஹமது ( இணை தலைவர் )

தீர்மானங்கள்:
1) அதிரை பைத்துல்மாலின் கடந்த 7 மாத அறிக்கையும் செயல்பாடும்  மிகவும் திருப்திகரமாக இருந்தது. மேலும், சிறப்பாக செயல்பட ரியாத் ABM அதிரை பைத்துல்மால் சார்பாக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

2) இல்மி (ILMI) அகடமி சார்பாக மாணவர்களுக்கு அறிவு மற்றும் நினைவாற்றல் (MEMORY POWER) திறனை மேம்படுத்துவதற்காக சிறப்பு பயிற்சியாளர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பயிற்சியாளர் ஜனாப் அமீர் முத்தஸீர் (BANGALORE) நமதூரிலும் அழைத்து இலவச முறையில் 10th,+2  கல்லூரி மாணவர்களுக்கு வரும் டிசம்பர் (அரையாண்டு விடுமுறையில்) ஒரு முறை பயிற்சி அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்காக பைத்துல்மால் ஆலோசித்து தலைமையகதுக்கு பதில் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.

3) நகைகடன் விசயமாக ஆலோசிக்கப்பட்டு அதற்கு தலைமையகம்  எடுக்கும் முயற்சிகள் வரவேற்க்கதக்கது . வரும் ஆண்டிலிருந்து நகைகடன் கொடுக்கும் முன் தாங்கள் பெறுபவரிடம்  குறிப்பிட்ட கால அளவில் கடனை திருப்பி செலுத்தா விட்டால் அவர்கள் செலுத்திய நகையிலிருந்து கொடுத்த தொகை போக மீதத்தை மட்டும் விற்பனை செய்து தருவோம் என ஒப்பந்தப்பத்திரம் (பதிவு பத்திரம்) மூலம் செய்து கொண்டால் வராக்கடனை முடிந்த அளவிற்கு தவிர்த்து கொள்ளளாம் என தீர்மானிக்கப்பட்டது.

4) மேலும் ரியாத் சார்பாக வரும் ஆண்டுகளில் பென்சன் தொகை விசயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு அடுத்த அமர்வில் முடிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 11-ம் தேதி DECEMBER 2015 மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு  ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு, அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.