ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சிக்கு மல்லிபட்டினம் சமுதாய நலமன்ற வளைகுடா பொறுப்பாளர் ஹசன் முகைதீன் தலைமை வகித்தார். மல்லிபட்டினம் சமுதாய நலமன்ற தலைவர் அப்துல் ஹலீம், மல்லிபட்டினம் சமுதாய நலமன்ற பொறுப்பாளர்கள் கான் சாஹிப், செய்யது இப்ராஹிம்ஷா, அப்துல்லா, மல்லி ஊரான் அப்துல் ரஹ்மான், அப்துல் அஜீஸ், முஹம்மது சித்திக், முஹம்மது லுக்மான், முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கமாண்டர் மணீஸ் அகர்வால், பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிச்சை, அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதையடுத்து மக்தப் மதரஸா தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மல்லிபட்டினம் சமுதாய நல மன்ற செயலாளர் உமர் கத்தாப் தலைமை வகித்தார். மல்லிபட்டினம் ஜாமத் தலைவர் அல்லா பிச்சை, செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட மல்லிபட்டினம் மக்தப் மதரஸா முதல்வர் மவ்லவி முஹம்மது சமியுல்லா பாகவி , மல்லிபட்டினம் பள்ளிவாசல் இமாம் ஹவ்து, பட்டுக்கோட்டை வடசேரி ரோடு பள்ளிவாசல் இமாம் அயூப் கான் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
முன்னதாக மல்லிபட்டினம் சமுதாய நல மன்ற துணை செயலாளர் அப்துல் பாசித் வரவேற்புரை ஆற்றி விழா முடிவில் நன்றி கூறினார்.
இந்த விழாவில் புதுப்பட்டினம் அபூ மெட்ரிக் பள்ளி இயக்குனர் பேராசிரியர் துல்கருணை, அதிரை காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி, மல்லிபட்டினம் முஹம்மது ராபிக், தாஜுதீன், அஹமது கபீர், பசூலுல் ஹக் மற்றும் மல்லிபட்டினம் ஜமாத்தார்கள், புதுப்பட்டினம் ஜமாத்தார்கள், சேதுபாவா சத்திரம் ஜமாத்தார்கள், ராமர் கோவில் தெரு பஞ்சயத்தார்கள், இரண்டாம் புளிக்காடு கிராம் ஊராட்சி மன்ற தலைவர், சரபோஜிபட்டினம் பஞ்சயத்தார்கள், சின்னமனை பஞ்சாயத்தார்கள், மல்லிபட்டினம் பகுதி பொதுமக்கள், மக்தப் மதரஸா மாணவ மாணவிகள் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் சேவை தொடங்கியது குறித்து மல்லிபட்டினம் சமுதாய நலமன்ற பொறுப்பாளர்கள் நம்மிடம் கூறுகையில்...
இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. மல்லிபட்டினம் ஈசிஆர் சாலையில் அடிக்கடி நிகழும் வாகன விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கும் பொருட்டு, சாதி மத இன பேதமின்றி அனைத்து சமுதாயத்தவர்களும் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தும் நோக்கில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு செய்யப்பட்டுள்ளது. நோக்கம் நிறைவேற பொருளதவி வாரி வழங்கிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் மல்லிபட்டினம் சமுதாய மன்றம் சார்பில் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்த ஆம்புலன்ஸ் சேவையை அனைத்து சமுதாய பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' என்றனர்.
ஜஸாக்கல்லாஹூ கைரன் சகோ.நிஜாம் அவர்களுக்கு...
ReplyDeleteஇன்ஸா அல்லாஹ் மிக விரைவில் செந்தலை பட்டினத்தில் துவா செய்யவும் கலந்து கொள்ளவும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅஸ்லாமு அலைக்கும் அதிரை வட்டார செய்திகளை தெரிந்து கொள்ள எளிமயாக உள்ளது அதிரைநியூஸ் சமிபத்தில் செந்தலை நியூஸ் தகவலூக்கு நன்றி மேலூம் உங்கள் வளர்ச்சிக்கு நான் துவா செய்கிறேன் இன்ஸா அல்லாஹ்
ReplyDeleteநண்பர் அப்துல் வகாப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ( படம் 2 இடமிருந்து வலது பக்கம் 5 வது அமர்ந்திருப்பவர்) அவர் தலையை போல் (சொட்ட ) நல்ல மனசு, சாதி- மதம் பாராமல் சேவை செய்யும் மனபக்குவம் மிக்கவர். சமூக பனி தொடர KMC Naughties Boys வாழ்த்துக்கள்.
ReplyDelete