அதிரை பிலால் நகரில் வசித்து வருபவர் ஆஷிக் ( வயது 30 ). இவருக்கு திருமணமாகிய 6 மாதங்கள் ஆகின்றன. பேரூந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இன்று மதியம் உணவகத்திலிருந்து ஈசிஆர் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அதிரை பேரூராட்சி அருகே வந்த போது எதிரே தூத்துக்குடியிலிருந்து வந்த வாகனத்தின் மீதி மோதி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கு நின்றிருந்த தமாகா மாவட்ட செயலாளர் அதிரை மைதீன் பலத்த காயமடைந்த ஆஷிக்கை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின்னர் உயர் சிகிச்சைக்ககாக தமுமுக ஆம்புலன்ஸில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் இவருக்கு மருத்துவ குழுவினரால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதுத்தெரு சமூக ஆர்வலர் ஆரீப் மற்றும் தமுமுக மருத்துவ அணி பொறுப்பாளர்கள் ஆகியோர் முகாமிட்டு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர்.
முன்னதாக தகவலறிந்த அதிரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். விபத்தில் சேதமடைந்த கார்- பைக் ஆகியன அதிரை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,
அதிரை பேரூராட்சி ஈசிஆர் சாலையோரத்தின் இருபுறமும் வாகனங்களை நிறுத்திவிடுவதால் எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் போய்விடுவதாகவும், மேலும் இந்த பகுதியில் வாகன நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதிரை காவல்துறை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், மீறி வாகனங்களை இந்த பகுதியில் நிறுத்துவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
This comment has been removed by the author.
ReplyDelete