.

Pages

Sunday, November 29, 2015

'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி அவர்களுடன் அதிரை சேர்மன் மரியாதை நிமித்த சந்திப்பு !

அதிரையை சேர்ந்தவர் இப்ராஹீம் அன்சாரி. முத்துப்பேட்டை அல் மஹா மகளிர் அரபிக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார். இணையதள எழுத்தாளர். 'மனுநீதி மனித குலத்திற்கு நீதியா ?' என்ற புத்தகம் இவரது முதல் வெளியீடாக வெளியிடப்பட்டது, இவரது அடுத்த வெளியீடாக 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு' என்ற நூல் பிரபல 'சாஜிதா புக் சென்டர்' சார்பில் அச்சில் தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த நூல் வெளியிடப்பட உள்ளது. இதற்கான வெளியீட்டில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இப்ராஹீம் அன்சாரி அவர்களை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் இன்று மாலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். சந்திப்பின் போது திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், இந்தியன் ரெட் கிராஸ் அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் அஹமது, முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் மாஷா முஹம்மது மாலிக், 'நிருபர்' முகைதீன் பிச்சை, அதிரை அஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

சந்திப்பு குறித்து எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் நம்மிடம் கூறுகையில்...
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதிரை பேரூராட்சி தலைவர் தம்பி எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களை நானே சந்தித்து பேச வேண்டும் என நினைத்தேன். அவர் என்னை சந்தித்து பேசியதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுமார் 1/2  மணி நேரம் நீடித்த எங்களது சந்திப்பில் ஊர் பொதுநலன் குறித்து கலந்தாலோசித்தோம். மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது' என்றார்.
 
 
     

7 comments:

  1. மாஷா அல்லாஹ்...
    இவரைப் போன்ற பெரியவர், அனுபசாலி, படித்தவர் மற்றும் கல்வியாளருடைய ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் பயன்படுத்திக் கொள்வது ஊர் மற்றும் சமுதாய நலனுக்கு மிகவும் பலனளிக்கும், இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்...
    இவரைப் போன்ற பெரியவர், அனுபசாலி, படித்தவர் மற்றும் கல்வியாளருடைய ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் பயன்படுத்திக் கொள்வது ஊர் மற்றும் சமுதாய நலனுக்கு மிகவும் பலனளிக்கும், இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்...
    இவரைப் போன்ற பெரியவர், அனுபசாலி, படித்தவர் மற்றும் கல்வியாளருடைய ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் பயன்படுத்திக் கொள்வது ஊர் மற்றும் சமுதாய நலனுக்கு மிகவும் பலனளிக்கும், இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  4. இப்ராஹிம் அன்சாரி காக்கா அனைத்து விஷயங்களையும் நன்கு அறிந்த அனுபவமிக்க திறமைசாலி. இப்படிப்பட்ட திறமைசாலிகளின் ஆலோசனையையும் மிக அவசியமானதாகும்.

    ஊர்நலன் சார்ந்த விசயங்களுக்கு அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் இப்ராஹிம் அன்சாரி காக்காவிடமும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கலாம்.

    ReplyDelete
  5. இப்ராஹிம்அன்சாரிபோன்றபோதுநலவாதிகளிடம் கலந்து பேசிசெய்யவேண்டியதைசெய்தால்நல்லபலன்கிட்டும்.அதோடு எனதுவேண்டுகோள்கடல்கரைதெருமையவாதியின் முன்பகுதி வடபுறத்தில்கப்பல்கப்பலாககுப்பைகுவிந்துகிடக்கிறதுஅதிரை.பேரூர்ஆட்சிதலைவர் கவனிக்கவேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. திருத்தம்//-கடல்கரைதெருமையவாதி// என்பதை..."'.மைய வாடி" என்றுதிருத்திவாசிக்கவும்.

    ReplyDelete
  7. ஊர்நலன் சார்ந்த விசயங்களுக்கு அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் இப்ராஹிம் அன்சாரி காக்காவிடமும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.