தஞ்சை மாவட்டம் அதிரையிலிருந்து நாகை மாவட்டம் பஞ்சநதிக்குளம் வரை 12,000 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்தி காடுகள் அமைந்துள்ளது. கடலையொட்டி அபூர்வ வகை செடி, கொடிகள், மரங்கள் வளர்ந்து இருக்கும் பகுதியை அலையாத்தி காடுகள் என அழைக்கின்றனர்.
சீறிவரும் அலைகளை இந்த செடி, கொடி, மரங்கள் ஆற்றுப்படுத்துவதால் இந்த பகுதி காடுகளுக்கு அலையாத்தி காடுகள் என பெயர் ஏற்பட்டது. இதனால் தான் சுனாமி கூட இந்த பகுதியை தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வன உயிரினங்களான மான், முயல், காட்டுப்பன்றி, கரடி, நரி உள்ளிட்டவை இந்த பகுதியில் வசிக்கின்றன.
இந்த காடுகளில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மழை பொழிவு இருக்கும். ஜனவரி, பிப்ரவரியில் குளிர் நிலவும். இந்த சீதோஷ்ணத்துக்காக பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வரும். இந்தாண்டு அக்டோபர் கடைசியில் தான் மழை துவங்கியது. இதனால் பறவைகள் கடந்த 10 நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. ரஷ்யா, இலங்கை, இந்தோனேஷியா, மியான்மர், மாலத்தீவு, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் இமயமலை அடிவாரம் என பல்வேறு பகுதிகளிலிருந்து நாரை இனங்கள், கூழக்கடா, அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி, மயில்கால் கோழி, நாமகோழி போன்ற இனங்களை சேர்ந்த பறவைகள் இங்கு வந்து குவிந்துள்ளன. இவை இங்கு இதமான சீதோஷ்ணத்தை அனுபவித்து, இனவிருத்தி செய்து மார்ச் துவக்கத்தில் தங்கள் நாடுகளுக்கு திரும்பி செல்லும். தற்போது வெளிநாட்டு பறவை இனங்களால் அலையாத்தி காடுகள் களைகட்டி விட்டன. இவற்றை யாரும் வேட்டையாடி விடாமல் தடுக்க வனத்துறையினர் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பறவைகளைப் பற்றிய அருமையான தகவல்கள், இந்த குறிப்பிட்ட மாதங்களுக்குள் இவைகள் வந்து பிறகு திரும்பிப் போகும், இது மாதிரிப் பறவைகள் தொன்று தொட்டு வந்து கொண்டுதான் இருக்கின்றது, அன்றெல்லாம் பறவைகளுக்கு பாதுகாப்பு கிடையாது, அப்போதும் அதிரைக்கு விருந்தாளியாக வந்த பறவைகள், அதிரையர்களுக்கு விருந்தாக அமைந்தது.
ReplyDelete1975-களில் வண்டிப்பேட்டை, சேர்மேன்வாடி, மற்றும் தெருக்களில் ஒரு ரூபாய்க்கு பத்து உள்ளான் என்று கூறியவாறு சைக்கிளில் வந்து விற்று விட்டு போவார்கள். இன்னும் பலவகையான பறவைகள் வரும்.
இன்று அப்படி இல்லை, வேட்டையாடக் கூடாது என்று பலத்த பாதுகாப்புக்கள் இருப்பதினால் விருந்தாக அமையாமல், விருந்தாளியாக மட்டும் அமைந்து விட்டு போய் விடுகிறது.
பறவைகள் கூட்டம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பறந்து பறந்து வாழ வாழ்த்துகிறேன்.
I hope they will return safely where they are coming from
ReplyDeletehttp://Job4Living.com/?ref=432213
ReplyDeletehttp://Job4Living.com/?ref=432213
ReplyDeletehttp://Job4Living.com/?ref=432213
ReplyDeleteSuper
ReplyDeleteSuper
ReplyDelete