அதிரை ஏரிபுறக்கரை கிராம நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதி பிலால் நகர் ரெயிவே கேட் வடிகால் வாய்க்காலிருந்து கடற்கரை செல்லும் குப்பம் வரை உள்ள ஏரி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியில் தஞ்சை கல்லணைக் கால்வாய் கோட்ட பொதுப்பணித்துறையினர் நேற்று மாலை முதல் பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் முட்புதர்களை அகற்றிவருகின்றனர். மேலும் வாய்க்காலில் சரிந்து காணப்படும் மண்ணை அள்ளிச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் விசாரித்த வகையில்...
'மழை காலங்களில் ஏற்படும் வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியின் வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணி நடைபெறுகிறது. பிலால் நகர் ரெயில்வே கேட்டிலிருந்து காதிர் முகைதீன் கல்லூரி சாலை வழியாக கடற்கரை குப்பம் வரை உள்ள வாய்க்காலில் உள்ள முட்புதர்கள் அப்புறப்படுத்தப்படும். மேலும் பருவ மழையில் ஏற்படும் வெள்ளம் குடியிருப்பு பகுதியில் புகாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றனர்.
பணியின் போது பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் சரோஜா மலை அய்யன், ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் மாலா முத்துக்கிருஷ்ணன், துணை தலைவர் நாகூரான், கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர் முஹம்மது மொய்தீன் உள்ளிட்டோர் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.