.

Pages

Wednesday, November 25, 2015

அதிரை லயன்ஸ் சங்கத்தினர் ஒரு ஜோடி கண்கள் தானம் !

அதிரை அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி ( வயது 92 ). ஐஎன்ஏ சங்கத்தலைவராக இருந்தார். நேற்று இவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். இந்த நிலையில் இவரது கண்களை மகன்கள் ஜெயராமன், காமராஜ் ஆகியோர் தானம் செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து திருமக்கோட்டை லயன்ஸ் சங்கத்தலைவர் நிரஞ்சன் அளித்த தகவலின் பேரில் அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் ஆறுமுகச்சாமி, பொருளாளர் இர்பான் சேக், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர்கள் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், மேஜர் முனைவர் கணபதி, பேராசிரியர் அல் ஹாஜி, சாரா அஹமது உள்ளிட்டோர் விரைந்து சென்று இறந்த முத்துசாமியின் இரண்டு கண்களை தானமாக பெற்று கும்பகோணம் அரவிந்த் கண் வங்கிக்கு அனுப்பி வைத்தனர்.

கண்களை தானமாக வழங்கிய முத்துசாமி குடும்பத்தினருக்கு அதிரை லயன்ஸ் சங்கத்தலைவர் ஆறுமுகச்சாமி மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் நன்றி கூறினார்கள்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.