.

Pages

Sunday, November 15, 2015

அதிரையில் மழை நிலவரம் !

அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாகவும், இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் பருவ மழை தீவிரம் அடையும். இதனால் அடுத்து வரும் 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

முன்னதாக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த [ 30-10-2015 ] அன்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் கடந்த நாட்களாக விடமால் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அதிரையின் பிரதான பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகின்றன. அன்றாடம் நடைபெறும் பணிகளும் பாதிப்படைந்துள்ளன.

தொடர் மழையால் முக்கிய வீதிகளின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகின்றன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிரை கடலோரப் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. உப்பளங்களில் நடைபெறும் பணிகளும் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

அதிரையில் வானம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. தொடர் மழையால் செடியன் குளம், செட்டியா குளம், புதுப்பள்ளி குளம், செயனாங் குளம், கடற்கரைதெரு ஜும்மா பள்ளி குளம், புதுத்தெரு மிஷ்கின் சாஹிப் பள்ளி குளம் உள்ளிட்டவற்றில் மழைநீர் நிரம்பி காணப்படுகிறது.

அதிரையில் கடந்த 30-10-2015 அன்று முதல் இன்று 15-11-2015 காலை 8.30 மணி வரை பெய்த பெய்த மழையளவு 31-10-2015 அன்று 49.6 மி.மீ, 3-11-2015 அன்று 9.6 மி.மீ, 7-11-2015 அன்று 26.2 மி.மீ, 8-11-2015 அன்று [ காலை 8.30 மணி நிலவரப்படி ] 3.80 மி.மீ, 8-11-2015 அன்று [ மாலை 4.30 மணி நிலவரப்படி ], 12.2 மி.மீ, 9-11-2015 அன்று 39 மி.மீ, 14-11-2015 அன்று 9 மி.மீ, இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 23.9 மி.மீ என பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.