திருச்சி தென்னுரை சேர்ந்தவர் ஜாகிர். இவர் ஜித்தாவில் உள்ள ஒரு வீட்டில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஜித்தா தமிழ் சங்கம் தலையீட்டின் பேரில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இறந்த ஜாஹிரின் குடும்பத்திற்கு இரத்த இழப்பிட்டு தொகையை பெற்று தந்துள்ளது. இந்த பணிகளை முன்னின்று செய்து கொடுத்த ஜித்தா தமிழ் சங்க பொறுப்பாளர்கள் குறிப்பாக ராஃபியா, ஜாவித் ஆகியோகளின் சேவையை பாராட்டி காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள் வாழ்த்து செய்தியை சமூக ஆர்வலர் ராஃபியா அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அன்புள்ள ரபியா மச்சான் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்).
தாம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் ஒன்றை இன்றுதான் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.
2011 - ஆம் ஆண்டு விபத்தில் இறந்துபோன ஜாகிரின் மனைவிக்கு அல்லாஹ்வின் உதவியும் தம்முடைய மற்றும் பேராசிரியர் எம் எம் எஸ் போன்ற நல்லுள்ளம் கொண்ட நண்பர்களின் ஒத்துழைப்போடு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் ஐம்பத்தி எட்டு இலட்சம் நஷ்டஈடு பெற்றுக் கொடுத்திருப்பது உண்மையில் பாராட்டுக் குரிய செயல்.
தமக்கும் தமது நண்பர் ஜாவித்துக்கும் எனது பாராட்டுக்களை சொல்வதைவிட நீங்கள் யாவரும் நல்ல உடல் நலத்துடனும் நிறைந்த செல்வத்துடனும் என்றும் குறையாத செல்வாக்குடனும் நெடுநாள் வாழ்ந்து இதுபோல் பல அறப்பணிகளை ஆற்றிட வல்ல இறைவனிடம் து ஆச் செய்கிறேன்.
இது காலம் தாழ்ந்த வாழ்த்துச் செய்தியானாலும் இதயத்தின் அடித்தளத்திலிருந்து இன்று சுபுஹுத் தொழுகைக்குப் பின் உங்கள் அனைவருக்காகவும் துஆச் செய்து எழுதப்பட்ட வாழ்த்துச் செய்தியாகும். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Masha allah engal sachavin idhu pondra podhu thondu sevai siraka vazhuthukirean
ReplyDeleteMasha allah engal sachavin idhu pondra podhu thondu sevai siraka vazhuthukirean
ReplyDeleteஎங்கள் சம்பந்தி ஆருயிர் நண்பர் ஓரிருமுறை சுகக்குறைவு ஏற்படும்பொழுது எல்லாம் நான் அவருக்கு ஆறுதல் தெரிவுக்கும்போழுது, "மாப்பிள்ளை பயப்படாதீர் உம்முடைய பாரபட்சமற்ற பொது தொண்டுக்கு இறைவனின் தனி கவனிப்பும் கருணையும் உம்மீது இருக்கும்" என்று சொல்வதுண்டு. அந்த அளவுக்கு அவருடைய உதவிக்கரம் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் இருக்கும். இன்று காலைகூட அவருடைய புதல்வரிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பேராசிரியர் அவர்களுடன் இணைந்து நாமும் அவர்களுக்காக துஆ செய்வோமாக.
ReplyDeleteI WISH YOU AND YOUR FRIENDS TO DO MORE SERVICES.
ReplyDeleteMAY ALLAH SWT ACCEPT YOUR SERVICES AND REWARD.