மேலும் பல டுபாக்கூர் ஆசாமிகள் தங்களின் தோற்றத்தை, நடையுடையையே மூலதனமாக்கி கண்ட கருமத்தையும் மக்களின் தலையில் கட்டிவிடுவார்கள் அப்படிப்பட்ட ஆட்களில் ஒருவரே பதஞ்சலி வியாபாரி, இவரைப் போன்றவர்களுக்கு அரசியல் பின்புலமும் ஆட்சியாளர்களின் ஆசியும் எப்போதும் இருக்கும், காரணம் 'கமிஷன்'.
சரி நாம் சொல்ல வந்த விளம்பர யானையைப் பற்றி பார்ப்போம்....
தஞ்சையில் செயல்படும் பிரமாண்ட ஜவுளி நிறுவனங்களில் ஒன்று தற்போதைய கிருஸ்துமஸ், கிருஸ்தவ புத்தாண்டு, பொங்கல் போன்று வரிசையாக வரும் சீசன் வியாபாரத்தை குறிவைத்து மக்களை ஈர்க்கும் வகையில் ஓர் யானையை தன் நிறுவன வாசலில் கட்டி வைத்துள்ளது!
இந்த யானையை பார்க்கும் எவரும் முதல் பார்வையிலேயே காதலில் விழும் காதலர்களை போல புறத்தோற்றத்தை கண்டு ஏமாறுவது நிச்சயம், அவ்வளவு தத்ரூபமாக செய்யப்பட்டுள்ளது இந்த எலக்ட்ரானிக் யானை பொம்மை. தலையை அசைத்தும் துதிக்கையை உயர்த்தியும் முன்பகுதி மட்டும் யானை அசைவதைப் போலவே ஒரளவு அசைந்தும் கண்ணாமூச்சி காட்டும் இந்த பிரமாண்ட பொம்மை சைனாக்காரனின் திறமையை? ஞாபகப்படுத்துகின்றது.
அசல் யானையை கண்டு அலறும் குட்டீஸ்களும் பெண்களும் கூட தைரியத்துடனும் குதூகலத்துடனும் தொட்டுத் தழுவி உற்சாகத்துடன் செல்கின்றனர், வெற்றிகரமானதோர் விளம்பரம்.
J. ஆசிக் அஹமது
(மாணவ செய்தியாளர்)
சங்க கால தமிழர்கள் யானை கட்டி போரடிசாங்க!இந்தகால தமிழ்ழர்கள் யானை காட்டி காஸு அடிக்கிறாங்க.காலம் மாறுகிறது
ReplyDeleteரசிக்கும்படியான கமெண்ட்!
Deleteமற்ற நிறுவனங்களால் தயாரிக்கப்படும் சில பொருட்களை பதஞ்சலி நிறுவனம், தங்களின் லேபிளை பயன்படுத்தி தவறாக விளம்பரப்படுத்தி வருவதாக 2012 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது., தீர்ப்பில் அந்நிறுவனத்துக்கு 11 லட்சம் அபராதம் விதித்தது வருங்காலத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புக்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனில் அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. .காரணமென்னவெனில் அந்நிறுவனத்தின் தயாரிப்பான தேன், உப்பு ஆய்வு செய்ததில் இந்த பொருட்கள் தர சோதனையை தோல்வி அடைந்தன. நம்மவூரில் விற்கும் பாலுக்கு தரப்பரிசோதனை செய்றாங்களா., விலையை தான் பார்க்கிறோம் தரத்தை பார்ப்பதில்லை .. டீக்கடைக்கு ஒருவகையான பால் வீட்டுக்கு மற்றொருவகைப்பால் சப்லைபண்ணுறாங்க, சோதிக்க லேபும் இல்லை அதிகாரியும் இல்லை.
ReplyDeleteநிஜ யானையை வைத்தால் மிருகவதை சட்டம் பாயும் என்பதால் ஆனந்தம் சில்க்ஸ் நிறுவனம் மாற்றுவழியை அலசி ஆராய்ந்ததில் சிக்கியது சீனாவின் தயாரிப்பு.