.

Pages

Thursday, February 16, 2017

தமிழகத்தின் 13 வது முதல்வராக பழனிசாமி பதவியேற்பு !

தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில், ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற முதல்வர் பழனிசாமிக்கு, ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.

பிறகு, தமிழக அமைச்சர்களுக்கு ஆளுநரை பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதி மொழியும் செய்து வைக்குமாறு, தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அழைப்பு விடுத்தார்.

இன்று  பதவியேற்ற அமைச்சர்களின் விவரங்கள் பின்வருமாறு;
எடப்பாடி பழனிச்சாமி - முதல்வர், நிதித்துறை, உள்துறை
திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை அமைச்சர்
செங்கோட்டையன் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
செல்லூர் ராஜு - கூட்டுறவுத் துறை அமைச்சர்
தங்கமணி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி - உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்
டி.ஜெயக்குமார் - மீன்வளத்துறை அமைச்சர்
சி.வி.சண்முகம் - சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர்
கே.பி.அன்பழகன் - உயர்கல்வித் துறை அமைச்சர்
டாக்டர் வி.சரோஜா - சமூகநலத்துறை அமைச்சர்
எம்.சி.சம்பத் - தொழில்துறை அமைச்சர்
கருப்பண்ணன் - சுற்றுச் சூழல் துறை அமைச்சர்
காமராஜ் - உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் - கைத்தறி துறை அமைச்சர்
ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி துறை அமைச்சர்
விஜய பாஸ்கர் - சுகாராரத் துறை அமைச்சர்
ஆர்.துரைக்கண்ணு - வேளாண்மை துறை அமைச்சர்
கடம்பூர் ராஜு - செய்தி மற்றும் விளம்பரம் துறை அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார் - வருவாய்த் துறை அமைச்சர்
என்.நடராஜன் - சுற்றுலாத் துறை அமைச்சர்
கே.சி.வீரமணி - வணிகவரித் துறை அமைச்சர்
ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை அமைச்சர்
பெஞ்சமின் - ஊரக தொழில்துறை அமைச்சர்
நிலோபர் கபில் - பணியாளர்நலத்துறை அமைச்சர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத் துறை அமைச்சர்
மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அமைச்சர்
பாஸ்கரன் -காதித்துறை அமைச்சர்
சேவூர் ராமச்சந்திரன் -அறநிலையத்துறை அமைச்சர்
வளர்மதி - பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர்
பாலகிருஷ்ண ரெட்டி- கால்நடைத்துறை அமைச்சர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.