.

Pages

Wednesday, February 22, 2017

சவுதி ரியாத்தில் 2019 ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை !

அதிரை நியூஸ்: பிப்-22
உலகின் மிகப்பெரும் நகர்புற (Urban Transport) மெட்ரோ ரயில் திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் 'அர்ரியாத் மெட்ரோ' (Al Riyadh Metro) தானியங்கி ரயில் சேவைக்கான கட்டுமானப் பணிகள் தற்போது சுமார் 48 சதவிகிதம் முடிவடைந்துள்ளதால் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அதன் முதற்கட்ட சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

23 பில்லியன் டாலர் முதலீட்டில் மொத்தம் 176 கி.மீ தூரத்திற்கு பாதை அமைக்கப்பட்டும், 85 மெட்ரோ ரயில் நிலையங்களுடனும், மொத்தம் 6 ஓடுபாதைகளில் (Lines) முதலில் 4, 5 மற்றும் 6 ஆம் எண் லைனில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் இந்த டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்கள் ஓடத்துவங்குவதால் சுமார் 3 மில்லியன் பயணிகளை துவக்கமாக மெட்ரோ ரயில் பயணிகளாக மாற்ற முடியும் எனவும் நம்பப்படுகிறது. ஏனெனில், பெரும்பான்மையான சவுதி நாட்டவர்களை பொருத்தவரை பெரிய வகை கார்களில் சாலையில் பறப்பதையே விரும்பக்கூடியவர்கள் என்பதுடன் பொது போக்குவரத்து வசதிகளும் அவர்களுக்கு புதிய பழக்கமே.

2030 ஆம் ஆண்டுவாக்கில் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும் பயணிகளில் எண்ணிக்கை சுமார் 6 மில்லியனிலிருந்து 8 மில்லியன் வரை அதிகரிக்கும் எனவும், தற்போதைய நிலையில் மெட்ரோ நிலையங்களை இணைக்கும் 24 தடங்களுக்கான பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

தற்போது ரியாத் மாநகரில் நாள் ஒன்று சுமார் 9 மில்லியன் வாகனப் போக்குவரத்துக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மெட்ரோ சேவை தொடங்குவதன் தினமும் சுமார் 620 லிட்டர் எரிபொருள் மிச்சமாவதுடன் ஆண்டுக்கு சுமார் 185 மில்லியன் டாலருக்கு நிகரான சுற்றுச்சூழல் மாசும் தடுக்கப்படும்.

Source: http://english.alarabiya.net
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.