தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பனிப்பிரதேசமான அண்டார்டிகா ஆகிய 7 கண்டங்களை உள்ளடக்கியதாக இந்த உலகம் திகழ்கிறது. மேலும், 'லெமூரியா' கண்டம் என்ற ஒன்று நமது இந்தியப் பெருங்கடலில் முழ்கியுள்ளதாக நிரூப்பிக்கப்படாத கருத்து ஒன்றும் நம்மவர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
அரசியல் எல்லைககளை கடந்து புவியியல் அடிப்படையில் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைந்த ஒரே கண்டமாக, அதாவது 'யுரேசியா' (Eurasia) கண்டம் என அழைக்க வேண்டும் என சொல்லும் விஞ்ஞானிகளும் உண்டு.
இந்நிலையில், நியூஸிலாந்து தீவு மற்றும் நியூ கலெடோனிய தீவுகளை முன்பு நில மார்க்கமாக இணைத்திருந்த சுமார் 94 சதவிகித பெரும்பகுதி ஒன்று கடலுக்குள் முழ்கியுள்ளதாகவும், இதன் பரப்பளவு சுமார் 5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் (1.9 மில்லியன் சதுர மைல்கள்) இருக்கலாம் என்றும் செயற்கைகோள்கள் உதவியுடன் ஆராய்ந்த 11 விஞ்ஞானிகள் இணைந்த குழுவின் கூற்று தெரிவிக்கின்றது.
இந்த கண்டத்தின் தரைப்படுகைகள் ஏனைய கடல் தரையிலிருந்து வித்தியாசப்படுவதாகவும், தற்போதுள்ள நியூ கலடோனியா மற்றும் நியூஸிலாந்தின் நில அமைப்புக்களுடன் ஒத்துப்போவதாகவும், இவை சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'கோண்ட்வானா' (Gondwana Super Continent) எனும் சூப்பர் கண்டத்திலிருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.
நியூஸிலாந்து (New Zealand) மற்றும் நியூ கலேடோனியா (New Caledonia) தீவுகளை இணைக்கும் நிலப்பரப்பாகவுள்ளதாக இக்கண்டத்திற்கு .இவ்விரு தீவுகளையும் குறிக்கும் வண்ணம் 'ஸிலாந்தியா' (Zealandia) என விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த புதிய கண்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கோட்பாடு எதிர்காலத்தில் விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் உலகின் கண்டங்கள் மொத்தம் 8 என பள்ளிப்பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என சிலாகிக்கின்றனர் நியூஸிலாந்து விஞ்ஞானிகள். 1995 ஆம் ஆண்டு துவங்கிய இப்புதிய கடலடி நிலப்பரப்பின் மீதான தொடர் ஆய்வுகளே தற்போது வெளியாகியுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sources: Gulf News / Business Insider / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.