அதிராம்பட்டினம், பிப்-18
பிப்-17, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உதய தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வலியுறுத்தி, தமிழகத்தில் கோவை, கடையநல்லூர், அதிராம்பட்டினம் ஆகிய 3 இடங்களில் யுனிட்டி மார்ச் எனும் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்வீரர்களின் சீருடை அணிவகுப்பை அவ்வமைப்பின் மாநிலப் பொருளாளர் வழக்குரைஞர் என்.எம் ஷாஜஹான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையிலிருந்து புறப்பட்டு சேர்மன் வாடி, இந்தியன் வங்கி, பேருந்துநிலையம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, பெரிய கடைத்தெரு, ஜாவியா சாலை வழியாக ஈசிஆர் சாலையை கடந்து பள்ளிச்சாலை வழியாக கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தை அடைந்தது.
பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவர் ஏ. ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது சேக் அன்சாரி, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பக்காவி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் திருச்சி எஸ். வேலுசாமி, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநிலத் தலைவர் ஏ. ஆபிருதீன், மன்பஈ ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.
முன்னதாக அவ்வமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் இசட். முஹம்மது தம்பி வரவேற்று பேசினார். முடிவில் மாவட்டச் செயலர் எம். மர்சூக் அகமது நன்றி கூறினார். இக்கூட்டத்தில் பெண்கள் உட்பட சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்ட மாநாடு துளிகள்:
1. பொதுக்கூட்ட மேடையில் பி.எப்.ஐ சீருடை செயல்வீரர்களின் 'டிரம்ஸ் டெமோ' செய்து காண்பிக்கப்பட்டது.
2. பொதுக்கூட்ட தொடக்கத்தில் 'ஒற்றுமை கீதம்' முழங்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
3. சுமார் 10 ஆயிரம் பேர் வரை அமரும் பிரம்மாண்ட மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
4. பெண்கள் சுமார் ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டனர். இவர்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
5. பொதுக்கூட்டத்தை கண்ட பார்வையாளர்கள் பிரமாண்ட மாநாடு போன்று இருந்ததாக பேசிக்கொண்டனர்.
6. பொதுக்கூட்ட தொடக்கத்தில் பிரஸ் மீட் நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் ஊடகங்கள் மற்றும் பிராதான காட்சி ஊடகங்கள் கலந்துகொண்டன.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.