.

Pages

Friday, February 24, 2017

சத்துணவுப் பணிக்கான நேர்காணல் மார்ச் 1-இல் தொடக்கம் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான கலந்தாய்வுக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கலந்தாய்வுக் குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது:
சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கான நேர்காணல் வருகின்ற 1.03.2017, 20.03.2017 ஆகிய நாட்களில் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை நடைபெறும்.

சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணல் வருகின்ற 3.03.2017 அன்று அந்தந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை  நடைபெறும்.

நேர்காணல் நடத்தும் அலுவலர்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாட்களில் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்களுக்கு குடிநீர் வசதி, இருக்கை வசதி, மின் விளக்கு, மின் விசிறி, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய் தளம், தடுப்பு கட்டை, இரு சக்கர வாகன நிறுத்தும் வசதி, சாமியனா பந்தல், மைக் வசதி, பெண் காவல் துறை பாதுகாப்பு  போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு மைய வாரியாக டோக்கன் வழங்கப்பட்டு அந்தந்த மையத்திற்கு டோக்கன் வாரியாக கலந்து கொள்ள வேண்டும்.  வரவேற்பு அறை அமைக்கப்பட வேண்டும்.  வரவேற்பு அறையில்  ஒரு உதவியாளர் அமைத்து வரும் விண்ணப்பதாரர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

நேர்காணல் அழைப்பு கடிதம் முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு பிரிவாக பிரித்து அழைப்பு கடிதம் அனுப்பி  வைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் அனைவரும் பெண்களாக இருப்பதால், காவல் துறையினர் எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமல் பாதுகாப்பு பணியில் தனி கவனம் செலுத்த வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.

கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆர்.தமிழ்செல்வன் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.