.

Pages

Thursday, February 23, 2017

ஹஜ் செய்திகள்: 2017 ஆம் வருடத்திற்கான முதல் ஹஜ் விமானம் ஜூலை 24ல் வருகை !

அதிரை நியூஸ்: பிப்-23
சவுதி சிவில் விமானத்துறையின் (The General Authority of Civil Aviation - GACA) அறிவித்தலின்படி, எதிர்வரும் 2017 ஆம் ஆண்டிற்கான முதல் ஹஜ் யாத்ரீகர்களை சுமந்து வரும் விமானம் துல்காயிதா 1 (ஜூலை 24) அன்று ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் என்றும் ஹஜ்ஜூக்குப் பிந்தைய கடைசி விமானம் துல்ஹஜ் 4 (ஆகஸ்ட் 26) அன்று ஜித்தா விமான நிலையத்திலிருந்து புறப்படும்.

2013 ஆம் ஆண்டு சர்வதேச ஹஜ் யாத்ரீகர்களின் 20 சதவிகித கோட்டா குறைக்கப்பட்டிருந்தது எதிர்வரும் ஹஜ் சீசனுக்கு விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து சுமார் 260,000 கூடுதல் ஹஜ் யாத்ரீகர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 2.5 மில்லியன் யாத்ரீகர்கள் வருகை என்ற நிலை படிப்படியாக உயர்த்தப்பட்டு எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 4 மில்லியன் யாத்ரீகர்கள் என்ற எண்ணிக்கை அளவை எட்டும்.

கடந்த வருட ஹஜ் யாத்திரையை சுமார் 1,862,909 பேர் நிறைவேற்றியுள்ளனர், அதில் 169 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு யாத்ரீகர்கள் 1,325,372 பேர் எனவும் (சவுதி) உள்நாட்டு யாத்ரீகர்கள் 537,537 எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருட ஹஜ் யாத்ரீகர்களின் போக்குவரத்திற்காக மொத்தம் 58 சர்வதேச விமான நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டதன் மூலம் மொத்தம் 1,246,660 வெளிநாட்டு யாத்ரீகர்கள் பயனடைந்தனர் என்றும், இவர்களில் 694,171  பேர் ஜித்தா விமான நிலையத்திலும், 551,170 பேர் மதீனா விமான நிலையத்திலும் தரையிறங்கினர்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.