.

Pages

Sunday, February 26, 2017

பிலிப்பைன்ஸ் கடலில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மர்மப் பிராணி !

அதிரை நியூஸ்: பிப்-26
பிலிப்பைன்ஸ் நாட்டின் தினாகத் தீவு கடற்கரை பகுதியில் 6.3 மீட்டர் நீளமும், மீட்டர் அகலமும் உள்ள உடல் முழுவதும் வெள்ளை நிற ரோமங்களால் மூடப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காண முடியாத பிராணி ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

மர்மப் பிராணி குறித்து கேள்விப்பட்ட பொதுமக்களும், மீடியாக்களும் இதுகுறித்த செய்திகளையும் படங்களையும் மீடியாக்களிலும், சமூக ஊடகங்களிலும் வெகுவேகமாக ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். கிட்டதட்ட முழுமையாக அழுகிப்போய்விட்ட இந்த பிராணியுடன் படமெடுப்பதை வழமைபோல் செல்ஃபி கும்பலும் விட்டு வைக்கவில்லை.

உயிருடன் இருக்கும் போது கண்டுகொள்ளாத சமூகம் இறந்தபின் வாழ்த்துமல்லவா அதற்கு ஒப்பான நிகழ்வே இந்த செத்த பிராணிக்கு கிடைத்துள்ள மங்கும் புகழ்.

Source: ndtv.com / skynews
தமிழில்: நம்ம ஊரான் 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.