.

Pages

Tuesday, February 21, 2017

தஞ்சை மாவட்டத்தில் 94 ஆயிரம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரனம் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக வங்கியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது;
இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்துள்ளதால், விவசாயிகள் பயிர் செய்யப்பட்டுள்ள பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.  வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள், வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகள் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் மாவட்டம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 வழங்க வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர் தொடர்பாக 94,000 விவசாயிகள் கண்டறியப்பட்டுள்ளார்கள்.  பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வறட்சி நிவாரணம்  வரவு வைக்கப்படவுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (கணக்கு) கணேசன், சொக்கலிங்கம் (விவசாயம்), சிண்டிகேட், ஆந்திரா, லெட்சுமி விலாஸ், பாங்க் ஆப் பரோடா, கனரா, சிட்டி யூனியன் வங்கி, பாண்டியன் வங்கி, இந்தியன் வங்கி, ஸ்டேட் பங்க் ஆப் இந்தியா, மேலும் பல்வேறு வங்கிகள் மேலாளர்கள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.