.

Pages

Monday, February 20, 2017

சவூதியிலிருந்து சென்னை உட்பட 7 இந்திய நகரங்களுக்கு புதிதாக 'ப்ளைநாஸ்' விமான சேவை துவக்கம் !'

அதிரை நியூஸ்: பிப்-20
சவுதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனங்களில் ஒன்று பிளைநாஸ் (Flynas), இது ரியாத், தம்மாம் மற்றும் ஜித்தாவிலிருந்து வாரத்திற்கு 18 சேவைகளை அபுதாபிக்கு வழங்கி வருகிறது. மேலும் 2012 ஆம் ஆண்டு அபுதாபியின் எதிஹாத் விமான நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 20 சர்வதேச வான் வழித்தடங்களில் இணைந்து சேவை (Code share) வழங்கி வருகின்றன. இந்த ஒப்பந்தத்தின் நீட்சியாக தற்போது 7 இந்திய நகரங்களுக்கு புதிதாக பிளைநாஸ் மற்றும் எதிஹாத் விமான நிறுவனங்கள் இணைந்து சேவை வழங்கவுள்ளன.

இவ்விரு நிறுவனங்களுக்கிடையே கையெழுத்திடப்பட்டுள்ள புதிய ஒப்பந்த நீட்சியின்படி, ரியாத், தம்மாம் மற்றும் ஜித்தாவிலிருந்து பிளைநாஸ் விமானத்தில் அபுதாபி வரும் பயணிகள் இங்கிருந்து அதே விமான டிக்கெட்டில் எதிஹாத் விமானத்தில் சென்னை, புது டில்லி, ஹைதராபாத், மும்பை, பெங்களூர், கொச்சி, கோழிக்கோடு ஆகிய 7 இந்திய விமான நிலையங்களுக்கு பறக்கலாம் எனவும், இரு விமானங்களிலும் 30 லக்கேஜ் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இணைந்த விமான வழித்தடங்களுக்கான டிக்கெட்டுகளை www.flynas.com என்ற இணைய தளத்தின் வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.