.

Pages

Tuesday, February 21, 2017

நீர்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த இளைஞர், சுறா தாக்கி பலி

அதிரை நியூஸ்: பிப்-21
இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான தீவு 'லா ரீயூனியன்' (La Reunion) இங்கு கடலில் பாடிபோர்டிங் சர்பிங் (Body boarding surfing) எனப்படும் நீர்சறுக்கு விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 26 வயது இளைஞரை சுறா மீன் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

2011 ஆம் ஆண்டு முதல், லா யூனியன் தீவில் இதுவரை 8 பேரை சுறா வேட்டையாடியுள்ளது.

லா ரீயூனியன் தீவு குறித்து கூடுதல் தகவல்;
தமிழர்கள் பண்டைய காலம் தொட்டு திரைகடலோடி திரவியம் தேடியவர்கள். அந்தத் தேடல் இன்னும் நமது சந்ததிகள் காலத்திலும் பல்வேறு பரிமாணங்களுக்கு உட்பட்டு நீடிக்கின்றன.

தமிழர் இயல்பின்படி இங்கு திரவியம் தேடச்சென்ற தமிழர்களின் சந்ததிகள் இன்னும் லா ரீயூனியன் தீவில் கணிசமாக வாழ்ந்து வருவதுடன் பலர் இன்னும் தாயகத்துடன் தொடர்பில் உள்ள செய்தியையும் கடந்த வருடம் தமிழக செய்தி தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியதை அறிந்திருப்பீர்கள்.

கரும்பு விவசாயம் நிறைந்த இந்தத் தீவில் தமிழை சிறார்களுக்கு கற்பிப்பதன் மூலம் மீட்டெடுக்கும் சுயமுயற்சிகளையும் இத்தீவுவாழ் தமிழர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.