.

Pages

Saturday, February 25, 2017

விமானத்தின் கதவை ஒழுங்கா மூடலையாம் ! இந்தோனேஷியா கூத்து!!

அதிரை நியூஸ்: பிப்-25
இந்தோனேஷியாவின் விமான நிறுவனங்களில் ஒன்று 'ஸ்ரீவிஜய' (Sriwijaya) இந்த நிறுவனம் இந்தோனேஷியாவின் பல தீவு கூட்டங்களுக்கிடையேயும் ஒருசில சர்வதேச தடத்திலும் சேவையாற்றி வருகின்றது. ஏற்கனவே, 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3 வகையான விபத்துக்களில் சிக்கி நல்ல பெயர் வேறு எடுத்துள்ள நிறுவனமிது.

தென் சீன நகரான குவாங்சோவிலிருந்து (Guangzhou) இந்தோனேஷியாவின் பாலி தீவிற்கு (Bali) 180 பயணிகள் மற்றும் 12 விமான சிப்பந்திகளுடன் விமானம் புறப்பட்டு சுமார் 1.5 மணிநேரம் கழித்தே அதன் கதவு ஒன்று ஒழுங்காக மூடப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் விமானம் புறப்படும் போது அதன் கம்ப்யூட்டர் சிஸ்டமும் விமானத்தின் கதவு சரிவர மூடப்படாததை கண்டுபிடித்து சொல்லவில்லை. எனவே, விமானம் மீண்டும் குவாங்சோ திரும்பி 30 நிமிட மறுபரிசோதனைக்குப் பின் மீண்டும் புறப்பட்டது என்றாலும் சுமார் 20 பயணிகள் 'நாங்க இதிலே வரலேப்பா' என இறங்கிக் கொண்டனர்.

நம்மூர்லேருந்து பப்பரிசி மகனை அனுப்பி எல்லா விமானத்தையும் சரி பண்ணனுப்பா!

குறிப்பு: இங்கு பப்பரிசி மகன் என்ற பெயர் வெறும் ஹாசிய நோக்கத்திற்காக இங்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் அவர்கள் ஒரு நேரத்தில் வீட்டுத்தேவைக்கான பொருட்களை (Home Appliances) சரிசெய்து தருவதில் மிகச்சிறப்புடன் விளங்கினார்கள் என்பதையும் நினைவுபடுத்துகின்றோம்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.