டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரான பின் சிலரால் அமெரிக்கா முழுவதும் படிப்படியாக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது.
முதலில் தன்னை முஸ்லீம் எதிர்ப்பாளராக காட்டிக்கொண்டு சில முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு மட்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நாடகமாடினார் ஆனாலும் முஸ்லீம் பெயருடன் நுழையும் அனைத்து நாட்டவர்களுக்கும் அமெரிக்க விமான நிலையங்களில் தொல்லைகள் தொடர்கின்றன என்றபோதும் டிரம்பின் சட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றங்களும் பெரும்பாலான மக்களும் வலிமையாக எதிர்ப்பையும் பதிவு செய்தும் சட்டபூர்வமாக தடுத்தும் வருகின்றனர்.
இந்தியர்கள் சுமார் 3 லட்சம் பேரை சகட்டுமேனிக்கு வெளியேற்றும் திட்டத்திலும் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதன் விளைவாக ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட அப்பாவி இந்திய எஞ்சினியர் ஸ்ரீநிவாஸ் என்பவர் அமெரிக்க இனவெறியன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது 'போலி தேசப்பக்தர்கள்' போல் அல்லாமல் இந்தியாவையும் இந்தியர்களையும் உண்மையாக நேசிக்கும் மக்களுக்கு மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முஹமது அலி அவர்களின் இரண்டாவது மனைவி கலீலா அலி அவர்களும் அவருடைய மகன் முஹமது அலி ஜூனியர் அவர்களும் ஜமைக்காவிலிருந்து புளோரிடா விமானம் நிலையம் வழியாக நாடு திரும்பிய நிலையில் விமான நிலைய அதிகாரிகளால் சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் தடுத்து நிறுத்தப்பட்டு தேவையற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக.
இத்தனைக்கும் முஹமது அலி ஜூனியர் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் பிறந்த அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருக்கும் குடிமகன் என்பதுடன் உலகறிந்த ஜாம்பவான் முஹமது அலியின் மகனும் கூட. இறுதியாக, கலீலா தான் முஹமது அலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி வெளியேற அத்தகைய படங்களை தன்னுடன் வைத்திராத முஹமது அலி ஜூனியர் தேவையற்ற கேள்விகளால் குடைந்தெடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
தான் விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டது பற்றி வக்கீல்கள் வழியாக குமுறியுள்ள முஹமது அலி ஜூனியர் தன்னைப் போலவே அமெரிக்க முஸ்லீம் குடிமகன்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அத்தகையவர்கள் தன்னை தொடர்பு கொண்டால் அனைவரும் ஓரணியில் இணைந்து சட்டப் போராட்டம் நடத்தலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.