அதிராம்பட்டினம், பிப்-22
அதிராம்பட்டினம் பகுதியில் கடும் பனிப்மீபொழிவால் மீனவர்கள் கடலில் தவிப்பு. மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவதில் தாமதம். வாகன ஓட்டிகள் அவதி.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஆறுமுககிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். இவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
மீனவர்கள் தவிப்பு:
இந்நிலையில் இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பகல் முழுவதும் வெயில் அடித்து வந்த நிலையில் இரவு முதல் திடீரென கடும் பனிப் பொழிவு இருந்தது.
இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீன்பிடித்து விட்டு வழக்கமாக காலை 8 மணிக்கு கரை திரும்புவார்கள். கடல் பகுதியில்
திடீரென மூடுபனி அதிகரித்ததால் கடல் முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. காலை 10 மணி வரை பனிமூட்டம் இருந்ததால் மீனவர்கள் கரை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. கடலில் பனியில் நனைந்தவாறு இருந்தனர். பின்னர் பனி விலகிய பின் அங்கிருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு கரைக்கு திரும்பினர்.
வாகன ஓட்டிகள் அவதி:
மூடுபனியால் அதிராம்பட்டினம் சேது நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மப்ளர், சுவெட்டர் அணிந்தபடி சென்றனர். இப்பகுதியில் பனிப்பொழிவு காலை 10 மணி வரை நீடித்தது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.