.

Pages

Friday, February 17, 2017

பட்டுக்கோட்டை ஆர்டிஓ விடம் மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தினர் கோரிக்கை !

பட்டுக்கோட்டை, பிப்-17
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ம. கோவிந்தராசு தலைமையில் குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கம் சார்பாக கோரிக்கை மனுவை அவ்வமைப்பின் மாவட்ட இணைச்செயலர் கே.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலர் பி.எம் இளங்கோவன், அதிரை பேரூர் தலைவர் அ.பஹாத் முகமது, துணை தலைவர் அக்பர்  அலி, செயலாளர்  அ.முகமது ராவுத்தர், இணை செயளாலர் நீதிபதி, பொருலாளர் ஹ.ஜலீல் முகைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்தனர்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
1. 40  சதவீதம் மாற்றுத்திறன் உள்ள வேலைவாய்ப்பற்ற  அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு  உதவித்தொகை  வழங்கபடும்  என்று தமிழக  அரசு அறிவித்த அரசாணை எண் : 27 நாள் : 22-02-2016 யை அனைத்து அதிகாரிகளும் நடைமுறைபடுத்த ஆவணம் செய்ய வேண்டும். மேலும் உதவித்தொகை  வேண்டி  விண்ணபிக்கும்  மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பம் பெற்று கொண்டற்கான ஒப்புகை சீட்டை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

2. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில்  பணிபுரியும்  மாற்றுத்திறனாளிகளுக்கு  காலமுறை   வழங்கப்படும்   என்று   கூறும்  அரசாணை  எண் : 151  நாள் : 16-10-2008 அனைத்து  துறை  தலைவர்களும்  அனைத்து  துறைகளில் நடைமுறைபடுத்த அரசின் பார்வைக்கு எடுத்து செல்ல வேண்டும்.

3. அரசு  பொது  சேவை  மையம் துவங்க மாற்றுத்திறனாளியான எங்களுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்.

4. கோட்டாட்சியர் அலுவலகத்தில்  மாதம்  ஒரு முறை மாற்றுத்திறனாளிகளுக்கான கூறை  தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் தலைமையில் நடத்த ஆவணம் செய்ய வேண்டும்.

5. மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க கடைபிடிக்கப்படும் கடுமையான     விதிமுறைகளை  தளர்த்தி  எளிமையான முறையில்  ஓட்டுநர் உரிமம்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. கடலோரங்களில்  வசிக்கும்  அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் மீனவ கூட்டுறவு  சங்கத்தில்  உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை வேண்டும்.

7. அனைத்து அரசு  மருத்துவமனைகளிலும்  மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்க அரை மணி நேரம் தனியாக நேரம் ஒதுக்க ஆணை பிறபித்த மருத்துவ இணை இயக்குநர் அவர்களின் உத்தரவை மருத்துவமனைகளில்  நடைமுறைபடுத்த  நடவடிக்கை  எடுக்க வேண்டும்

8. ரயிலில் மாற்றுத்திறனாளியான நாங்கள்  பயணம்  மேற்கொள்ளும் பொழுது முன்பு எங்களின் வாகனத்தை ரயில்  எடுத்து  செல்ல  எந்த விதிமுறைகளும்  இல்லாமல்  வாகனத்தின் பதிவு   புத்தக   நகல்   வழங்கினால்  இலவசமாக  வண்டியை  எடுத்து செல்ல  முடியும் ஆனால் இப்பொழுது  எங்கள் வாகனத்தை ரயிலில் எடுத்து செல்ல வாகனத்தின் புத்தகத்தில் மாற்றுத்திறனாளியில்  வாகனம்  என்று  பதிவு  செய்ய வேண்டும்  இல்லையேல்  வாகனத்தை  எடுத்து  செல்ல ரூ230 வசூலிக்கிறார். கட்டணம் வசூலிப்பது சில ரயில் நிலையங்களில் மட்டும் நடைமுறையில் உள்ளது. ஆனால் சில ரயில் நிலையங்களில் இலவசமாக அனுமதிக்கிறார். இதில் எது உண்மை என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

9.  ரயிலில் பயணம் மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு இணையம் மூலம் டிக்கட் முன்பதிவு  செய்ய ரயில்வே துறை ஒரு அடையாள அட்டையை வழங்கியுள்ளது ஆனால் இதுநாள் வரை அதற்கான வசதியை இணையதளத்தில் வழங்கப்படவில்லை உடனே அதற்கான வசதியை ஏற்படுத்தி தர ரயில் அதிகாரியின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

10. மாநகராட்சிம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கட்டப்படும் அரசின் வாடகை கடைகளில்  மாற்றுத்திறனாளிகள் தொழில்  தொடங்க  மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகையுடன் கூடிய முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
1. கே.கிருஷ்ணமூர்த்தி -   மாவட்ட  இணை  செயலாளர்
2. பி.எம்.இளங்கோவன் -   மாவட்ட  செயலாளர்
3. அ.பஹாத் முகமது -   அதிரை  நகர  தலைவர்
4. அகபர் அலி -   அதிரை  துணை  தலைவர்
5. ஹ.ஜலீல் முகைதீன் -   சேதுபாவாசத்திரம்  ஒன்றிய  செயலாளர்
6. மு.முகமது  ராவுத்தர் -   பட்டுக்கோட்டை  ஒன்றிய  தலைவர்
7. பிரபா -   பட்டுக்கோட்டை  ஒன்றிய  செயலாளர்
8. ருத்ரைய்யா -   பட்டுக்கோட்டை நகரம்
9. குமரேசன் -   நுஒ பட்டுக்கோட்டை  ஒன்றிய  தலைவர்
10.  லாரன்ஸ்  சேவியர் -   பேராவூரனி  ஒன்றிய  செயலாளர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.