.

Pages

Wednesday, February 15, 2017

குவைத்தில் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த எம்.பி கோரிக்கை !

அதிரை நியூஸ்: பிப்-15
குவைத்தில் நடைமுறையிலுள்ள சட்டத்தின் சட்டப்பிரிவு எண்: 79ல் திருத்தங்களை மேற்கொண்டு முழுமையாக இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என குவைத் பாராளுமன்ற உறுப்பினர் முஹமது அல் ஹயேப் (Mohammad Al Hayef) கோரிக்கை விடுத்துள்ளார்.

குவைத்தில் சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டுமாயின் முதலில் குவைத் தேசிய சபை (பாராளுமன்றம்) (National Assembly) அங்கீகரித்து பரிந்துரையின் மீது குவைத் அமீர் (அரசர்) தனது இறுதி ஒப்புதலை வழங்குவார். ஏற்கனவே, 2012 ஆம் ஆண்டு இதே கோரிக்கை எழுப்பப்பட்டபோது அமீர் நிராகரித்திருந்தார்.

குவைத் சட்ட அமைச்சர் பாலேஹ் அல் அஸப் இக்கோரிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையில், முதலில் மக்களும் பின்பு அமீரும் ஏற்றால் மட்டுமே சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் என்றாலும் அமெரிக்காவின் மாநிலங்களில் ஒன்றோ? எனும் அளவுக்கு கருதப்படும் குவைத்தில் இத்தகைய இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைபடுத்த வேறு சில எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் உள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.