துபையின் 'சிட்டி வாக்' (City Walk) பகுதியில் தூறல் மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் வழுக்கும் சாலைகளில், போக்குவரத்து நிறைந்திருந்த வேளையில், அங்கிருக்கும் குடும்பத்தினர், குழந்தைகள், கட்டிடங்கள் போன்ற சொத்துக்கள், பிற வாகனங்கள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் மிகவும் ஆபத்தான முறையில் சிலர் 'கார் ஸ்டண்ட்' (Dangerous Car Stunt) எனப்படும் சாகச விளையாட்டுக்களில் தங்களுடைய வாகனத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து கார் ஸ்டண்டில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தினர்.
இதற்கிடையில், இந்த ஆபத்தான சாகச விளையாட்டில் ஈடுபட்டு பிறருக்கு தொல்லை தரும் விதத்தில் நடந்து கொண்டதையறிந்த துபையின் ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களே நேரடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு தண்டனை வழங்கினார்.
தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர் அனைவரும் தினமும் 4 மணிநேரம் தொடர்ந்து 30 நாட்களுக்கு துபையின் வீதிகளை சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததை அனைவராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.