.

Pages

Saturday, February 18, 2017

அதிரையில் 6 அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க மமக முடிவு !

அதிராம்பட்டினம், பிப்-18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் - உறுப்பினர்களின் கலந்தாலோசனைக்கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது தலைமை வகித்தார். தமுமுக மாவட்டச் செயலர் அதிரை ஹாஜா, தமுமுக/மமக அதிரை பேரூர் பொருளாளர் செய்யது முகமது புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிராம்பட்டினம் பேரூர் திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் அதிரை பேரூராட்சி பகுதிகளின் சுகாதர சீர்கேடுகள், நிரந்திர செயல் அலுவலர் நியமிப்பது, பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் [ 22-02-2017 ] அன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் அதிரை பேருந்துநிலையம் அருகில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்து பெருந்திரளாக பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் எதிர்வரும் [ 23-02-2017 ] அன்று வியாழக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு தமுமுக மாவட்ட செயலர் அதிரை அகமது ஹாஜா இல்லத்தில் தமுமுக/ மமக பொதுக்குழு கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தமுமுக / மமகவினர் பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.