.

Pages

Thursday, February 16, 2017

அமீரகத்தின் முதலாவது நானோ சேட்டிலைட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது !

அதிரை நியூஸ்: பிப்-16
இந்தியாவிலிருந்து நேற்று ராக்கெட் உலகிலேயே முதன்முதலாக 104 துணைக்கோள்களை சுமந்து சென்று விண்வெளியில் நிலைநிறுத்தியது அறிந்ததே. இதில் 5வதாக பிரிந்து சென்ற நானோ சேட்டிலைட் அமீரகத்தின் முஹமது பின் ராஷித் விண்வெளி மையம் (MBRSC) மற்றும் ஷார்ஜாவில் அமைந்துள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகம் (AUS) இணைந்து உருவாக்கிய, நாயிப் - 1 (Nayif - 1) என்று பெயரிடப்பட்ட முதலாவது நனோ வகை சேட்டிலைட்டாகும்.

சுற்றுவட்டப் பாதையில் (Orbit) நிலை நிறுத்தப்பட்ட 18வது நிமிடத்திலிருந்து ஷார்ஜா அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நிலையத்தின் (Ground Station) கட்டுப்பாட்டிற்குள் அதன் இயக்கம் கொண்டு வரப்பட்டது.

இந்த கல்விசார் நாயிப் - 1 நனோ சேட்டிலைட் உதவியால் அமீரகத்தின் பொறியியல் துறை மாணவர்கள் வடிவமைத்தல் (Designing), கட்டுமானம் (Building), சோதனைகள் (Testing) மற்றும் நானோ சேட்டிலைட்டுகளை இயக்குதல் (Operating Nano Satellites) போன்றவற்றிற்கு பயிற்சி பெற மிகவும் பயன்படும்.

Sources:Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.