.

Pages

Monday, February 27, 2017

அதிரையில் மகனின் புதிய தொழில் நிறுவனத்தை நெகிழ்ச்சியுடன் திறந்து வைத்த தாய் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், பிப்-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜக்கரியா வணிக வளாகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக 'சூப்பர் டிஜிட்டல் ஸ்டுடியோ' என்ற தொழில் நிறுவனத்தை நடத்தி வருபவர் அப்துல் ரஹ்மான். இதன் மற்றுமொரு அங்கமாக 'சூப்பர் திருமண அழைப்பிதழ் ஷோரும்' என்ற பெயரில் திருமண அழைப்பிதழ்களுக்கான பிரத்யோக ஷோரூமை புதிதாக தொடங்கி உள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலை இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிறுவன உரிமையாளர் அப்துல் ரஹ்மானின் தாய் நபீசா அம்மாள் தனது மகனின் புதிய தொழில் நிறுவனத்தை மனம்நிறைந்த நெகிழ்ச்சியோடு திறந்து வைத்து வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் அப்துல் ரஹ்மான் கூறுகையில்;
'சூப்பர் டிஜிட்டல் ஸ்டுடியோ' ஒரு அங்கமாக ''சூப்பர் திருமண அழைப்பிதழ் ஷோரும்" திறக்கப்பட்டுள்ளது. என் மீது அதிக பாசம் கொண்டுள்ள எனது தாய் அவர்களை வைத்து புதிய ஷோரூமை திறந்தது எனக்கு மிக மகிழ்ச்சியை தருகிறது.

இந்நிறுவனத்தில் திருமணங்கள், விழாக்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கான அனைத்து வகை அழைப்பிதழ்கள் குறைந்த கட்டணத்தில், வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ற நவீன டிசைன்களில் தரமானதாக தயார்செய்து உரிய நேரத்தில் விநியோகம் செய்ய உள்ளோம். மேலும் ரெடிமேட் கார்டுகள், மல்டி கலர் கார்டுகள், வாழ்த்து அட்டைகள், லட்டர் பேடு, கவர், வால்போஸ்டர், விசிடிங் கார்டு உள்ளிட்டவை தயார் செய்து தரப்படும்.  அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர் எங்களது நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புக்கு: 9976329344 
 
 
 
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.