தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளின் சுகாதர சீர்கேடுகள், நிரந்திர செயல் அலுவலர் நியமிப்பது, பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 6 கட்சியினர் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் புதன்கிழமை காலை அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்பாக நடைபெற்றது.
அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நிரந்திர செயல் அலுவலர் நியமிப்பது, புதிதாக டிராக்டர் வாகனம் வாங்குவது, பிறப்பு - இறப்பு - கட்டிட வரைபட அனுமதி சான்றிதழ்கள் தாமதமில்லாமல் வழங்குவது, அதிரை பேரூர் பகுதிகளில் சுகாதாரமான குடிநீர் வழங்குவது, அதிரை பேரூர் அனைத்து வார்டுகளிலும் பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது, துப்புரவு பணியாளர்களுக்கு தாமதமில்லாமல் ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், காங்கிரஸ் கட்சி பொருளாளர் நாராயண சாமி, தமாகா அதிரை பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக செயலாளர் அதிரை அஹமது ஹாஜா, அதிரை பேரூர் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் என். காளிதாஸ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
முன்னதாக துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்ட முடிவில் முன்னாள் கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் நன்றி கூறினார்.
திமுகவினர்:
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில் அதிரை பேரூர் அவைத்தலைவர் ஜே. சாகுல் ஹமீது, திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம், பொருளாளர் கோடி முதலி, முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் என்.கே.எஸ் சபீர், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி ஆர். முல்லை மதி, துணைச்செயலர் தில்லைநாதன், மீனவரணி பொறுப்பாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் எம். முகம்மது சரீப், நூர்லாட்ஜ் செய்யது, என்.ஏ முஹம்மது யூசுப், முத்துராமன், ஏவிஎம் வரிசை முகமது, இராமநாதன், அன்சாரி, இராஜதுரை, அதிரை பேரூர் இளைஞர் அணி அமைப்பளார் சாகுல் ஹமீது, அகிலன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
காங்கிரசார்:
அதிராம்பட்டினம் நகரத் தலைவர் எஸ்.எம். முஹம்மது முகைதீன், பாருக், துணைத் தலைவர் ஏ கோவிந்தன், பொருளாளர் நாராயண சாமி, கார்த்திகேயன், துணை செயலாளர் பி.திலகராஜ் கட்டபொம்மன், தாவூது பாட்சா.
தமாகா:
தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அதிரை பேரூர் இளைஞர் அணி தலைவர் டி. ராஜா, கண்ணன், வீரப்பன், புஹாரி, சகாதேவன்,
முஸ்லீம் லீக்:
அதிரை பேரூர் செயலர் சேக் அப்துல்லா, மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சாகுல்ஹமீது, அபூபக்கர், சாகுல்ஹமீது,
மனித நேய மக்கள் கட்சியினர்:
மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, தமுமுக அதிரை பேரூர் செயலர் ஏ.ஆர் சாதிக் பாட்சா, தமுமுக/மமக அதிரை பேரூர் பொருளாளர் செய்யது முகமது புஹாரி, எம். சாகுல் ஹமீது, துணை செயலாளர் எம் ஆர்.ஹாலிது, எஸ். எஸ் சேக்காதி, நியாஸ் அகமது, நசுருதீன்
இந்திய கம்யூனிஸ்ட்:
அதிரை பேரூர் செயலாளர் கே. ஹாஜா மைதீன், உள்ளிட்ட 6 கட்சிகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.