அதிராம்பட்டினம், பிப்-17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் திமுக நிர்வாகிகள் - உறுப்பினர்களின் கலந்தாலோசனைக்கூட்டம் திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் ஜே. சாகுல் ஹமீது தலைமை வகித்தார். திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம், அதிரை பேரூர் பொருளாளர் கோடி முதலி, முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் என்.கே.எஸ் சபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிராம்பட்டினம் திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் அதிரை பேரூராட்சி பகுதிகளின் சுகாதர சீர்கேடுகள், நிரந்திர செயல் அலுவலர் நியமிப்பது, பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் [ 22-02-2017 ] அன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் அதிரை பேருந்துநிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் கூட்டத்தில் சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா, திமுக மூத்த நிர்வாகி கோ.சி மணி, தீப்பொறி ஆறுமுகம், குமரிமுத்து உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன் அனைவரையின் வரவேற்று பேசினார். கூட்ட முடிவில் துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், ஆர். முல்லை மதி, துணைச்செயலர் தில்லைநாதன், மீனவரணி பொறுப்பாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் முஹம்மது இப்ராஹீம், எம். முகம்மது சரீப், நூர்லாட்ஜ் செய்யது, என்.ஏ முஹம்மது யூசுப், முத்துராமன், லெ.மு.செ சைஃபுதீன், கே.இத்ரீஸ்அகமது, ஏவிஎம் வரிசை முகமது, இராமநாதன், அன்சாரி, இராஜதுரை, அதிரை பேரூர் இளைஞர் அணி அமைப்பளார் சாகுல் ஹமீது, அகிலன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.